குஜராத் சுல்தானகம்
குஜராத் சுல்தானகம் (Gujarat Sultanate) தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலப் பகுதிகளை, கிபி 1407 முதல் 1573 முடிய ஆண்ட இசுலாமிய முடியாட்சி ஆகும்.
குஜராத் சுல்தானகம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1407–1573 | |||||||||||||
கொடி | |||||||||||||
தலைநகரம் | பதான் (1407–1411) அகமதாபாத் (1411–1484, 1535–1573) சாம்பனேர் (1484–1535) | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | பழைய குஜராத்தி பாரசீகம் (அலுவல் மொழி) | ||||||||||||
சமயம் | இந்து சமயம் இசுலாம் சமணம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
முசாபரித்து வம்சம் | |||||||||||||
• 1407–1411 | முதலாம் முசாபர் ஷா (துவக்கம்) | ||||||||||||
• 1561-1573 | மூன்றாம் முசாபர் ஷா (இறுதி) | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• 1407ல் தில்லி சுல்தானகத்திலிருந்து, குஜராத்தை முதலாம் முசாபர் கான் விடுவித்து தன்னாட்சியுடன் ஆண்டார். | 1407 | ||||||||||||
• அக்பர், குஜராத் சுல்தானகத்தை முகலாயப் பேரரசில் இணைத்தார். | 1573 | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | குஜராத், தமனும் தியூவும் மற்றும் மும்பை இந்தியா |
வரலாறு
தொகுதில்லி சுல்தானகத்தை ஆண்ட முகமது ஷா துக்ளக் என்பவர், கிபி 1391ல் பதான் நகரத்தை தலைமையிடமாகக்[1][2][3] கொண்ட குஜராத் பிரதேசத்தின் ஆளுநராக ஜாபர் கான் என்ற முதலாம் முசாபர் ஷாவை நியமித்தார்.
தைமூரின் படையெடுப்பால், தில்லி சுல்தானகம் வீழ்ச்சியடைந்த நேரத்தில், கிபி 1407ல் தில்லி சுல்தானகத்தின் குஜராத் ஆளுநர், குஜராத் சுல்தானகத்தை தன்னாட்சி கொண்ட அரசாக அறிவித்தார். முதலாம் முசாபர் ஷாவின் பேரன் முதலாம் அகமது ஷா 1411ல் அகமதாபாத் நகரத்தை நிறுவினார்.[4] அவரது வாரிசான இரண்டாம் முகமது ஷா, குஜராத்தின் இராசபுத்திர சிற்றரசர்களை அடக்கினார். சுல்தான் மகமது பேக்டா[3][5] ஆட்சியில் குஜராத் சுல்தானகம் செழிப்புடன் விளங்கியது.
இராசபுத்திரர்களை அடக்கி, தியூ கடற்கரையில் கப்பற்கடையை நிறுவினார். 1509ல் போர்த்துகேயர்கள், தியூ போரில், தியூவை குஜ்ராத் சுல்தான்களிடமிருந்து கைப்பற்றினர். 1526ல் குஜராத் சுல்தான் சிக்கந்தர் ஷா கொல்லப்பட்டதிலிருந்து, குஜராத் சுல்தானகம் வீழ்ச்சி கண்டது. 1535ல் முகலாயப் பேரரசர் உமாயூன் குஜராத் சுல்தானகத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 1537ல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா, போர்த்துகேயர்களால் கொல்லப்பட்டார்.[3][6]
முகலாயப் பேரரசர் அக்பர், மூன்றாம் முசாபர் ஷா[7] ஆட்சியின் போது, 1573ல் குஜ்ராத் சுல்தானகத்தை வென்று, முகலாயப் பேரரசில் இணைத்ததுடன் குஜராத் சுல்தானகத்தின் ஆட்சி முடிவுற்றது.
ஆட்சியாளர்கள்
தொகு- ஜாபர் கான் எனும் முதலாம் முசாபர் ஷா 1391 - 1411
- முதலாம் அகமது ஷா 1411 - 1443
- இரண்டாம் முகமது ஷா 1443 - 1451
- இரண்டாம் அகமது ஷா 1451 - 1458
- முதலாம் முகமது ஷா எனும் முகமது பேக்டா 1458 - 1511
- இரண்டாம் முசாபர் ஷா 1511 - 1526
- பகதூர் ஷா 1526 - 1537
- மூன்றாம் முகமது ஷா 1537 - 1554
- மூன்றாம் அகமத் ஷா 1554 - 1561
- மூன்றாம் முசாபர் ஷா 1561 - 1573
இதனையும் காண்க
தொகு- அயோத்தி நவாப்
- ஆற்காடு நவாப்
- தக்காண சுல்தானகங்கள்
- குஜராத் சுல்தானகம்
- ஜூனாகத் அரசு
- வங்காள நவாபுகள்
- ஹைதராபாத் நிஜாம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Majumdar, R.C. (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 155-7
- ↑ Taylor 1902, ப. 4.
- ↑ 3.0 3.1 3.2 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;GBP
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Majumdar, R.C. (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 709-23
- ↑ Majumdar, R.C. (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 162-7
- ↑ "The Cambridge History of the British Empire". CUP Archive. 26 July 2017 – via Google Books.
- ↑ Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, pp.391-8
ஆதாரநூற்பட்டி
தொகு- Taylor, Georg P. (1902). The Coins Of The Gujarat Saltanat. Vol. XXI. Mumbai: Royal Asiatic Society of Bombay. hdl:2015/104269. Archived from the original on 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)