முதன்மை பட்டியைத் திறக்கவும்


பதான் (Patan), இந்தியா, குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.

பதான்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
ஏற்றம்76
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,33,737
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்384265
சிதலமடைந்த புதுக்கோட்டை
சகஸ்ரலிங்க குளம்

வரலாறுதொகு

சௌதா நாட்டு அரசன் வனராஜன் சௌதா என்பவரால் கி. மு., 745இல் கோட்டையுடன் கட்டப்பட்ட நகரம். அப்போது இந்நகரத்தை அன்ஹில்பூர் பதான் என்றும் அன்ஹில்வாட் பதான் என்றும் அழைத்தனர்.

வரலாற்று ஆசிரியர் டெர்டியஸ் சாண்ட்லர் (Tertius Chandler) என்பவர் கி. பி., 1000வது ஆண்டில், ஒரு இலட்சம் மக்கட்தொகை கொண்ட நகரங்களில், பதான் நகரம் 10வது இடத்தை வகித்துள்ளது என்கிறார்.[1]

பதான் நாட்டு சிறு வயது இளவரசன் மூலராஜா II என்பவர் ஆட்சியின் போது, கோரி முகமது பதான் நாட்டைத் தாக்கிய போது, மன்னரின் தன் தாய் நாயகி தேவி, மவுண்ட் அபு அருகில் உள்ள கயாத்திரா என்ற கிராமத்தில் முகமது கோரியை எதிர்த்து போரிட்டு வென்றார்.

தில்லி சுல்தான் குத்புதின் ஐபெக்கின் படைகள், 1200-1210ஆம் ஆண்டுகளில் பதான் நகரத்தை சூறையாடினார்கள். பின்பு 1298இல் அலாவுதீன் கில்சி என்பவர் பதான் நகரத்தை முற்றிலுமாக அழித்தார்.


ராணியின் குளம்தொகு

சோலாங்கி அரச குலத்தின் காலத்தில் இரண்டாம் பீமதேவன் (1022-1063) நினைவாக அவரது மனைவி உதயமதி என்பவரும், அவரது மகன் இரண்டாம் கர்ணதேவன் ஆகியோர், நாற்புறங்களிலும் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய படிகள் அமைந்த குளத்தை நிறுவினர். இக்குளத்திற்கு பின்னர் ராணியின் குளம் எனப்பெயராயிற்று.

1304ஆம் ஆண்டில் கவிஞர் மெருதுங்க சூரி எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் இந்த ராணியின் குளத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.[2]

பதான் நகரத்து ராணியின் குளம், உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக 22 சூன் 2014இல் ஐ. நா. வின் யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.[3]

அமைவிடம்தொகு

அகமதாபாத்திலிருந்து 108 கி. மீ., தொலைவில் பதான் நகரம் அமைந்துள்ளது..[4]பதான் நகரம் கடல் மட்ட்த்திலிருந்து 249 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பதான் நகர மக்கட்தொகை 1,12,038 ஆகும். அதில் ஆண்கள் 53% , பெண்கள் 47%. ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 72% ஆகும் [5]

பதான் நகரத்தின் 12 வாயில்கள்தொகு

 
ராணியின் குளம்

 1. பக்வாடா
 2. சிடியா
 3. மீரா
 4. ஆகார்
 5. கொத்தகோயி
 6. பாட்டிபால்
 7. கூங்டி
 8. கனஸ்தா அல்லது காளிகா
 9. கான்சரோவர்
 10. மோதிஷா
 11. பாதி
 12. லால்

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

 • Prof. K.A. Nizami, ‘Foundation of the Delhi Sultanat’ in A Comprehensive History of India-Vol-V part one.
 • Chandler, Tertius. 1987. Four Thousand Years of Urban Growth: An Historical Census. St. David's University Press.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதான்&oldid=2546647" இருந்து மீள்விக்கப்பட்டது