முதலாம் கர்ணதேவன்

கர்ணதேவன் I அல்லது முதலாம் கர்ணதேவன் (Karandev I) மேற்கு இந்தியாவின் குஜராத்தை கிபி 1064 முதல் 1092 முடிய ஆட்சி செய்த சோலாங்கி வம்ச அரசன் ஆவான். இவர் இரண்டாம் பீமதேவனுக்குப் பின் பட்டமேறியவர். ஆஷ்வால் நாட்டு அரசன் பில் என்பவரை போரில் வென்றமைக்கு நினைவாக, சபர்மதி ஆற்றாங்கரையில் கர்ணாவதி நகரை (தற்கால அகமதாபாத்) அமைக்க அடித்தளமிட்டவர். கர்ணதேவன், மிருனாள்தேவியை மணந்து ஜெயசிம்ம சித்தராஜா என்ற மகனை பெற்றார்.[1]

முதலாம் கர்ணதேவன்
திரைலோக்கிய மல்லர்
குஜராத்தின் மன்னர்
ஆட்சிக்காலம்கிபி 1064–1092
முன்னையவர்முதலாம் பீமதேவன்
பின்னையவர்ஜெயசிம்ம சித்தராஜா
துணைவர்மைனாதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
ஜெயசிம்ம சித்தராஜா (மகன்)
பரம்பரைசோலாங்கி வம்சம்
தந்தைமுதலாம் பீமதேவன்
தாய்உதயமதி

கே. எம். முன்ஷி எழுதிய படான் நி பிரபுதா எனும் குஜராத்தி வரலாற்று புதினத்தில், மன்னர் கர்ண தேவன், அரசி மிருனாள்தேவி மற்றும் அவர்களின் மகன் ஜெயசிம்ம சித்தராஜா ஆகியோரைப் பற்றி விரிவாக விவரித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.britannica.com/EBchecked/topic/621483/Karnadeva-Vaghela
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கர்ணதேவன்&oldid=3619903" இலிருந்து மீள்விக்கப்பட்டது