சபர்மதி ஆறு

இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ஆறு

சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை வாகல் என்றும் அழைக்கிறார்கள்.

சபர்மதி ஆறு
River
சபர்பதி ஆற்றங்கரையில் அகமதாபாத் நகரம்
நாடு இந்தியா
மாநிலங்கள் குசராத், ராஜஸ்தான்
கிளையாறுகள்
 - இடம் Wakal river, Sei Nadi, Harnav River, Hathmati River, Watrak River
நகரங்கள் அகமதாபாத், காந்திநகர்
உற்பத்தியாகும் இடம் Dhebar lake, Rajasthan
 - அமைவிடம் ஆரவல்லி மலைத்தொடர், உதய்ப்பூர் மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா
 - உயர்வு 782 மீ (2,566 அடி)
நீளம் 371 கிமீ (231 மைல்)

பெரும்பகுதியான ஆறானது குஜராத் மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான அகமதாபாத், காந்திநகர் ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபர்மதி_ஆறு&oldid=2902546" இலிருந்து மீள்விக்கப்பட்டது