காம்பே வளைகுடா
காம்பே வளைகுடா (Gulf of Khambhat) என்று வரலாற்று ரீதியாக அறியப்படும் காம்பத் வளைகுடா, இந்தியாவின் அரேபிய கடல் கடற்கரையில் உள்ள ஒரு விரிகுடா ஆகும். மும்பைக்கு வடக்கே குசராத்து மாநிலம் மற்றும் டையூ தீவின் எல்லையாக இது உள்ளது.[1] காம்பே வளைகுடா வடக்கில் சுமார் 200 கிமீ (120 மைல்) நீளம், 20 கிமீ (12 மைல்) அகலம் கொண்டும் தெற்கில் 70 கிமீ (43 மைல்) அகலமும் கொண்டும் அமைந்துள்ளாது. குசராத்து மாநிலத்தில் பாய்கின்ற முக்கிய நதிகளான நர்மதா, தபதி, மாகி மற்றும் சபர்மதி ஆகிய நதிகள் காம்பே வளைகுடாவில் வளைகுடாவில் முகத்துவாரங்களை உருவாக்குகின்றன.[2]
காம்பே வளைகுடா கத்தியவார் தீபகற்பத்தை குசராத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து பிரிக்கிறது.[3][4][5]
காம்பே வளைகுடாவின் குறுக்கே 30-கிலோமீட்டர் (19 மைல்) அணை, கல்பசார் திட்டம் என்ற பெயரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.[6]
வனவிலங்குகள்
தொகுகாம்பே வளைகுடாவின் மேற்கில், கிர் வன தேசிய பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், கத்தியவார் அல்லது சௌராசுட்டிரா பகுதியில் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன.[3][7] வளைகுடாவின் கிழக்கே, தாங்குசு காடு மற்றும் குசராத்து, மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சூல்பனேசுவர் காட்டுயிர்க் காப்பகத்தில் வங்காளப் புலிகள் வாழ்கின்றன.[8]
காம்பே வளைகுடாவை சுற்றியுள்ள பகுதிகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Cambay, Gulf of". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ Saha, S., Banerjee, S., Burley, S.D., Ghosh, A. and Saraswati, P.K. (2010). The influence of flood basaltic source terrains on the efficiency of tectonic setting discrimination diagrams: an example from the Gulf of Khambhat, western India. Sedimentary Geology 228 (1): 1–13.
- ↑ 3.0 3.1 Nowell, K.; Jackson, P. (1996). "Panthera Leo". Wild Cats: Status Survey and Conservation Action Plan (PDF). Gland, Switzerland: IUCN/SSC Cat Specialist Group. pp. 17–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0045-0.
- ↑ Trivedi, P. and Soni, V. C. (2012). Significant bird records and local extinctions in Purna and Ratanmahal Wildlife Sanctuaries, Gujarat, India பரணிடப்பட்டது 2017-08-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Jhala, Y. V., Qureshi, Q., Sinha, P. R. (Eds.) (2011). Status of tigers, co-predators and prey in India, 2010. National Tiger Conservation Authority, Government of India, New Delhi, and Wildlife Institute of India, Dehradun. TR 2011/003.
- ↑ "The Gulf of Khambhat Development Project". Gujarat. Archived from the original on 4 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Asiatic Lion population up from 411 to 523 in five years". Desh Gujarat. 2015-05-10. http://deshgujarat.com/2015/05/10/asiatic-lion-population-up-from-411-to-523-in-five-years/.
- ↑ Karanth, K. U. (2003). "Tiger ecology and conservation in the Indian subcontinent". Journal of the Bombay Natural History Society 100 (2–3): 169–189. http://www.nfwf.org/AM/Template.cfm?Section=Home&TEMPLATE=/CM/ContentDisplay.cfm&CONTENTID=8073.