முதன்மை பட்டியைத் திறக்கவும்

வல்சாடு மாவட்டம் (Valsad district) இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இது தெற்கு குசராத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் வல்சாடு நகரம். வல்சாடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,244 சதுர கிலோ மீட்டர்கள்.

வல்சாடு மாவட்டம்
வல்சாத், வல்சத், வல்சட்
மாவட்டம்
நாடு இந்தியா
மாவட்டம்குஜராத்
மாவட்டம்வல்சாடு
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்396 001
தொலைபேசிக் குறியீடு912632
வாகனப் பதிவுGJ-15
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 920 பெண்கள் /
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

இம்மாவட்டம் மாம்பழம், சப்போட்டா பழம், தேக்கு மரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது.

உட்பிரிவுகள்தொகு

அமைவிடம்தொகு

வடக்கே நவ்சாரி மாவட்டம், கிழக்கே நாசிக் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம், தெற்கே பால்கர் மாவட்டம், மாகாராஷ்டிர மாநிலம், மேற்கே அரபுக் கடல் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது..[1]

பொருளாதாரம்தொகு

வேளாண்மைதொகு

மா, வாழை, கரும்பு, சுரைக்காய், நவதானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தொழில்கள்தொகு

வேதியல் பொருட்கள், மருந்துகள், துணி மற்றும் நூல், காகித தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. இம்மாவட்டம் தோட்டக்கலைக்கு மையமாக திகழ்கிறது. மேலும் சிறு, குறுந்தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சாடு மாவட்ட மக்கட்தொகை 1,703,068 ஆகவும்,.[2][2] மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 561 நபர்கள் என்ற அளவிலும்,[2]பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 926 பெண்கள் என்ற அளவிலும், எழுத்தறிவு விகிதம் 80.94% ஆகவும் உள்ளது.,[2] [2]

மேற்கோள்கள்தொகு

  1. "General Information for Valsad, Tourist Place in Valsad, Tourism in Valsad". Indiaonapage.com (2010-01-23). பார்த்த நாள் 2010-09-14.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்சாடு_மாவட்டம்&oldid=2046327" இருந்து மீள்விக்கப்பட்டது