கே. எம். முன்ஷி
இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்
கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே. எம். முன்ஷி) (Kanhaiyalal Maneklal Munshi, குசராத்தி: કનૈયાલાલ માણેકલાલ મુનશી) (திசம்பர் 30, 1887 - பிப்ரவரி 8, 1971) குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர்.
குலபதி கே. எம். முன்ஷி | |
---|---|
முன்ஷி அவரது அறுபதுகளில் | |
பிறப்பு | 30 டிசம்பர் 1887 |
இறப்பு | பிப்ரவரி 8, 1971 மும்பை, இந்தியா |
பணி | இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வக்கீல், எழுத்தாளர் |
அறியப்படுவது | பாரதீய வித்யா பவன் நிறுவனர் (1938), உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் (1952-53),உத்தரப்பிரதேச ஆளுநர் (1952-57).. |
அரசியல் கட்சி | சுவராஜ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், சுவதந்தரா கட்சி, ஜன் சங் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | ஆதிலட்சுமி பதக், லீலாவதி சேத் |
பிள்ளைகள் | ஜகதீசு முன்சி, சரளா சேத், உஷா ரகுபதி, லதா முன்ஷி, கிரிஷ் முன்ஷி |
தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குசராத் இலக்கியத்தில் மிகவும் அறியப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆசியுடன், கே. எம். முன்ஷி 1938ல் பாரதிய வித்தியா பவன் எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.[1][2]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "KULAPATI K. M. MUNSHI". Archived from the original on 2015-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-09-26.
- ↑ KULAPATI K. M. MUNSHI: Dates & Events of Munshi's Life[தொடர்பிழந்த இணைப்பு]