பிரெஞ்சு இந்தியா
பிரெஞ்சு இந்தியா (French India) என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கரையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஹே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (lodges) உண்டு.
Établissements français de l'Inde பிரெஞ்சு இந்தியா | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1664–1954 | |||||||||
குறிக்கோள்: லிபர்த்தெ, எகாலித்தே, ஃபாதேனித்தே | |||||||||
நாட்டுப்பண்: லா மார்செயிலே(ஸ்) | |||||||||
நிலை | குடியேற்றம் | ||||||||
தலைநகரம் | பாண்டிச்சேரி (தற்போதைய புதுச்சேரி) | ||||||||
பேசப்படும் மொழிகள் | பிரெஞ்சு மேலும்; தமிழ், தெலுங்கு, மலையாளம் | ||||||||
பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுநர் | |||||||||
வரலாற்று சகாப்தம் | ஏகாதிபத்தியம் | ||||||||
• பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ஒழிக்கப்பட்டபோது | 1664 | ||||||||
• நிகழ்நிலை மாற்றம் | நவம்பர் 1 1954 | ||||||||
பரப்பு | |||||||||
1750 | [convert: invalid number] | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1750 | 100000000 | ||||||||
• 1948 | 332045 | ||||||||
நாணயம் | பிரெஞ்சு இந்திய ரூபி | ||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IN | ||||||||
|
மொத்தப் பரப்பளவான 510 கி.மீட்டரில் (200 ச.மைல்) புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 கி.மீ (113 ச.மைல்) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள் தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.