யானம்
யானம் (Yanam) என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனி நகரம் ஆகும். தற்போது இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 20 சதுர கி.மீ. ஆகும். இது ஆந்திர பிரதேச மாநில கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளையாகிய கௌதமி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆறு வருவாய் கிராமங்கள் உள்ளன .
- மெட்டகூரு
- யானம்
- கனகாலபேட்டா
- பிரான்ஸ்திப்பா
- அடவிபொலம்
- இசுக்கதிப்பா
யானம் | |
— நகரம் — | |
அமைவிடம்: யானம், புதுச்சேரி
| |
ஆள்கூறு | 16°42′19″N 82°11′5″E / 16.70528°N 82.18472°E |
நாடு | இந்தியா |
பிரதேசம் | புதுச்சேரி |
மாவட்டம் | யானம் |
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன்[1] |
முதலமைச்சர் | வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[2] |
மக்களவைத் தொகுதி | யானம் |
மக்கள் தொகை | 31,362 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.yanam.gov.in |
புனித அன்னா கத்தோலிக்க கோவில்
தொகுபிரஞ்சு கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் 1846-இல் கட்டிய புனித அன்னா கோவில் ஏனாமில் உள்ளது. இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர் அருள்திரு மிக்கேல் லெக்னாம் என்பவர். கோவில் கட்டட வேலை 1846-இல்தான் முடிவுற்றது. அதற்கு முன்னரே, 1836 ஏப்ரல் 30-ஆம் நாள் அவர் இறந்துபோனார். அக்கோவிலில் பதிக்கப்பட்ட கல்வெட்டு இச்செய்தியைத் தருகிறது.
இக்கோவில் ஐரோப்பிய கட்டடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பொருள்கள் யாவும் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
இந்தக் கத்தோலிக்க கோவிலின் அருகிலேயே ஒரு மலைக்கோவிலை பிரஞ்சுக்காரர்கள் கட்டினர். அதுபோலவே கத்தோலிக்க கோவிலின் பின்புறம் மற்றொரு மலைக்கோவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
அங்கு நிலவும் வரலாற்றுப்படி, 1943-ஆம் ஆண்டு ஒரு கப்பல் புயலில் சிக்கி மணலில் புதைந்துவிட்டதாம். கப்பலில் 1000 டன் எடையுள்ள பொருள்கள் இருந்தன. கப்பலை மீட்க எவ்வளவோ முயன்றும் அதை விடுவிக்க இயலவில்லை. ஏறக்குறைய ஓராண்டளவாக கப்பல் புதைந்தே கிடந்தது. கப்பலை மீட்க அமெரிக்க பொறியாளர் ஒருவர் அனுப்பப்பட்டார். அவரும் பெரிதும் முயன்றும் கப்பலை விடுவிக்க இயலாததால் அன்னை மரியாவை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தினார். அதன்பின் அதிசயமாக அக்கப்பல் விடுவிக்கப்பட்டதாம்.
அன்னை மரியாவுக்கு நன்றியாக அந்தப் பொறியாளரும் அவருடைய மனைவியாரும் ஒரு கோவில் கட்டி எழுப்பினராம். இந்த வரலாறு அக்கோவிலின் பின்புறம் உள்ள மலைக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/ltgovernor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "புனித அன்னா கோவில் வரலாறு". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
வெளி இணைப்பு
தொகு- ஏனாம் மாவட்ட அரசின் தகவல் தளம் பரணிடப்பட்டது 2005-01-30 at the வந்தவழி இயந்திரம்
- ஏனாம் மாவட்ட அரசின் தளம்