ஒன்றியப் பகுதி (இந்தியா)
ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக இந்திய நடுவண் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.[1] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.
தற்போதைய ஒன்றியப் பகுதிகள்
தொகுஇந்திய வரைபடத்தில் உள்ள இடம் | பெயர் | பரப்பளவு | பகுதி | உருவாக்கப்பட்ட ஆண்டு |
---|---|---|---|---|
சட்டமன்ற தேர்தல்கள் கொண்ட ஒன்றியப் பகுதிகள் | ||||
தேசிய தலைநகர் பகுதி | 1,484 km2 (573 sq mi) | வட இந்தியா | 1 நவம்பர் 1956 | |
சம்மு காசுமீர் | 42,241 km2 (16,309 sq mi) | வட இந்தியா | 31 அக்டோபர் 2019 | |
புதுச்சேரி | 483 km2 (186 sq mi) | தென்னிந்தியா | 1 நவம்பர் 1954 | |
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் மற்றும் அரசாங்கங்கள் இல்லாத ஒன்றியப் பகுதிகள் | ||||
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 8,250 km2 (3,190 sq mi) | வங்காள விரிகுடா | 1 நவம்பர் 1956 | |
சண்டிகர் | 114 km2 (44 sq mi) | வட இந்தியா | 1 நவம்பர் 1966 | |
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ | 603 km2 (233 sq mi) | மேற்கு இந்தியா | 26 சனவரி 2020 | |
இலட்சத்தீவுகள் | 32.62 km2 (12.59 sq mi) | அரபுக் கடல் | 1 நவம்பர் 1956 | |
இலடாக்கு | 59,146 km2 (22,836 sq mi) | வட இந்தியா | 31 அக்டோபர் 2019 |
இவற்றில் புதுச்சேரி, தில்லி மற்றும் சம்மு காசுமீர் ஆகிய மூன்று ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றத்துடன் கூடிய தகுதி உடையனவாகும். மற்ற ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றங்கள் இன்றி, நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் நிருவகிக்கப்படுகிறது. தில்லி மற்றும் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதிகளுக்கு தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், சட்டங்கள் இயற்றுவதற்கு முன், சட்ட முன்மொழிவுகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது. இந்த 3 ஒன்றியப் பகுதிகளுக்கு துணைநிலை ஆளுநர் தலைமை தாங்குவார்.
முன்னாள் ஒன்றியப் பகுதிகள்
தொகுஇந்திய வரைபடத்தில் உள்ள இடம் | பெயர் | பரப்பளவு | பகுதி | உருவாக்கப்பட்ட ஆண்டு | பிரிக்கப்பட்ட ஆண்டு | இன்றைய நிலை |
---|---|---|---|---|---|---|
அருணாசலப் பிரதேசம் | 83,743 km2 (32,333 sq mi) | வடகிழக்கு இந்தியா | 21 சனவரி 1972 | 20 பெப்ரவரி 1987 | இந்திய மாநிலங்களில் ஒன்று | |
தாத்ரா மற்றும் நகர் அவேலி | 491 km2 (190 sq mi) | மேற்கு இந்தியா | 11 ஆகத்து 1961 | 26 சனவரி 2020 | தாத்ரா & நகர் அவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதி | |
தமனும் தியூவும் | 112 km2 (43 sq mi) | மேற்கு இந்தியா | 30 மே 1987 | 26 சனவரி 2020 | தாத்ரா & நகர் அவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதி | |
கோவா | 3,814 km2 (1,473 sq mi) | மேற்கு இந்தியா | 19 திசம்பர் 1961 | 30 மே 1987 | இந்திய மாநிலங்களில் ஒன்று | |
இமாச்சலப் பிரதேசம் | 55,673 km2 (21,495 sq mi) | தென்னிந்தியா | 1 நவம்பர் 1956 | 25 சனவரி 1971 | இந்திய மாநிலங்களில் ஒன்று | |
மணிப்பூர் | 22,327 km2 (8,621 sq mi) | வடகிழக்கு இந்தியா | 1 நவம்பர் 1956 | 21 சனவரி 1972 | இந்திய மாநிலங்களில் ஒன்று | |
மிசோரம் | 21,087 km2 (8,142 sq mi) | வடகிழக்கு இந்தியா | 21 சனவரி 1972 | 20 பெப்ரவரி 1987 | இந்திய மாநிலங்களில் ஒன்று | |
நாகாலாந்து | 16,579 km2 (6,401 sq mi) | வடகிழக்கு இந்தியா | 29 நவம்பர் 1957 | 1 திசம்பர் 1963 | இந்திய மாநிலங்களில் ஒன்று | |
திரிபுரா | 10,491.65 km2 (4,050.85 sq mi) | வடகிழக்கு இந்தியா | 1 நவம்பர் 1956 | 21 சனவரி 1972 | இந்திய மாநிலங்களில் ஒன்று |