முதன்மை பட்டியைத் திறக்கவும்


ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் (United Provinces of Agra and Oudh), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1902 முதல் 1937 முடிய இருந்தது. பின்னர் ஆக்ரா மற்றும் அயோத்தி பிரதேசங்கள், 1937ல் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1]

ஐக்கிய மாகாணம், ஆக்ரா மற்றும் அயோத்தி
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்கள் of பிரித்தானிய இந்தியா

1902–1937 [[ஐக்கிய மாகாணம்|]]
Location of ஐக்கிய மாகாணங்கள்
ஐக்கிய மாகாணங்களின் வரைபடம், 1909
தலைநகரம் அலகாபாத்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1902
 •  Disestablished 1937
தற்காலத்தில் அங்கம் உத்தரப் பிரதேசம் & உத்தரகண்ட்

அயோத்தி மற்றும் ஆக்ரா மாகாணங்களை ஒன்றிணைத்து ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் 1902ல் உருவாக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தின் தலைநகராக அலகாபாத் நகரம் விளங்கியது. [2] [3]


பொருளடக்கம்

புவியியல்தொகு

1,07,164 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தின் வடக்கில் திபெத், வடகிழக்கில் நேபாளம், கிழக்கில் பிகார், தெற்கில் தற்கால மத்தியப் பிரதேசமும், மேற்கில் பஞ்சாப் மாகாணமும் எல்லைகளாகக் கொண்டது. [4]இம்மாகாணத்தில் வற்றாத கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் பாய்கிறது.

நிர்வாகக் கோட்டங்கள்தொகு

பிரித்தானியாவின் இந்திய அரசு ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தை நிர்வகிக்க, ஐக்கிய மாகாணத்தை 9 வருவாய் கோட்டங்களாகவும், 48 மாவட்டங்களாகவும் பிரித்தனர்.[5]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு