மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா

central and sate


மத்திய மாகாணம் (Central Provinces) பிரித்தானிய இந்தியாவின் ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும். கிழக்கிந்திய கம்பெனி படையினர், முகலாயப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசின் மத்திய இந்தியப் பகுதிகளை வென்று, 1861ல் நிறுவிய மாகாணம் ஆகும்.

மத்திய மாகாணங்கள்
மாகாணம் பிரித்தானிய இந்தியா
[[தற்கால மத்தியப் பிரதேசத்தின் சௌகோர் & நெருபுத்தா பகுதிகள்|]]
 

1861–1936

Flag of மத்திய மாகாணங்கள்

கொடி

வரலாறு
 •  நாக்பூர் மாகாணம் மற்றும் தற்கால மத்தியப் பிரதேசத்தின் சௌகோர் & நெருபுத்தா பகுதிகளை இணைத்தன் மூலம் 1861
 •  மத்திய மாகாணம் மற்றும் விதர்பா 1936
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Central Provinces and Berar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 5. (1911). Cambridge University Press. 681–3. 


1909ல் மத்திய மாகாணத்தின் வருவாய் கோட்டங்கள் மற்றும் மாவட்டங்கள்
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஜபல்பூர், 1897

மத்திய மாகாணத்தில் தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் மற்றும் மகாராட்டிராவின் கிழக்குப் பகுதியான நாக்பூர் பகுதிகளைக் கொண்டிருந்தது. மத்திய மாகாணத்தின் தலைநகரம் நாக்பூர் நகரம் ஆகும். 1936ல் பேரர் எனப்படும் விதர்பாவை உள்ளடக்கிய மத்திய மாகாணம் (Central Provinces and Berar) நிறுவப்பட்டது.

மாகாண எல்லைகள் தொகு

மத்திய மாகாணத்தைச் சுற்றிலும் சுதேச சமஸ்தானங்கள் அமைந்திருந்தது. வடக்கே போபால் இராச்சியம் மற்றும் ரேவா இராச்சியங்களும், கிழக்கில் சோட்டா நாக்பூர் மற்றும் களஹண்டி சமஸ்தானமும், தெற்கில் ஐதராபாத் இராச்சியமும், மேற்கில் விதர்பா பிரதேசமும் எல்லைகளாக இருந்தது. [1]

புவியியல் தொகு

தக்காண பீடபூமியில் பெரும் பகுதிகளை கொண்ட மத்திய மாகாணத்தில், மலைத்தொடர்களும், ஆற்றுச் சமவெளிகளும் கொண்டுள்ளது.

மத்திய மாகாணத்தின் வடக்கில் புந்தேல்கண்ட் மேட்டு நிலங்களும், யமுனை ஆறு மற்றும் கங்கை ஆற்றின் கிளை ஆறுகள் பாய்கிறது. மத்திய மாகாணத்தில் விந்திய மலைத்தொடர்கள், கிழக்கு மேற்காக பரவியுள்ளது. இம்மாகாணத்தின் ஜபல்பூர் தொடருந்து நிலையம் முக்கியமானதாகும்.

இம்மாகாணத்தின் வடக்கில் நர்மதை ஆற்றுச் சமவெளியை, தெற்கில் உள்ள தக்காண பீடபூமியை, சத்புரா மலைத்தொடர்கள் இரண்டாகப் பிரிக்கிறது. மத்திய மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள தக்காண பீடபூமியில் கோதாவரி ஆற்றின் துணை ஆறுகள் பாய்கிறது. மத்திய மாகாணத்தின் தெற்கே அமைந்த தக்காண பீடபூமி பகுதியில் விதர்பா மற்றும் நாக்பூர் அமைந்துள்ளது.

இம்மாகாணத்தின் கிழக்கில் அமைந்த சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தின் சத்தீஸ்கர் பகுதியில் மகாநதி பாய்கிறது.

மக்கள் தொகையியல் தொகு

பிரித்தானிய இந்தியா அரசு 1931ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 17,990,937 ஆகும்.[2]

மொழிகள் தொகு

1901ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தில் இந்தி மொழி, மராத்தி மொழி, சத்தீஸ்காரி மொழி, புந்தேலி மொழி, கோண்டி மொழி, இராஜஸ்தானி மொழி, தெலுங்கு மொழி, முண்டா மொழிகள் மற்றும் ஒடியா மொழிகள் பேசப்பட்டது. [3]

அரசியல் & நிர்வாகம் தொகு

மத்திய மாகாணங்கள் பிரித்தானிய இந்தியா அரசின் முதன்மை ஆனையாளரின் கட்டுப்பாட்டில் 1861 முதல் 1920 வரை நிர்வகிக்கப்பட்டது.

மத்திய மாகாணங்கள், நேர்புத்தா, ஜபல்பூர், நாக்பூர், சத்தீஸ்கர் என நான்கு வருவாய் கோட்டங்களாகவும், 18 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. விதர்பா (Berar) முதன்மை ஆனையாளரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது. 1901ல் இம்மாகாணத்தில் உள்ள 15 சுதேச சமஸ்தானங்கள் 31,188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,631,140 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இம்மாகாணத்தின் பெரிய சுதேச சமஸ்தானம் பஸ்தர் இராச்சியம் ஆகும். [4]

நவம்பர், 1913ல் மத்திய மாகாணத்திற்கு முதன்மை ஆனையாளர் கட்டுப்பாட்டில் ஒரு சட்டமன்றம் நிறுவப்பட்டது. [5] 1919ல் இம்மாகாணத்தை நிர்வகிக்க ஒரு ஆளுநர் நியமிக்கப்பட்டார்.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1919ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் நிறுவப்பட்டது. இதில் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 53 உறுப்பினர்களும், 18 நியமன உறுப்பினர்களும் அடங்குவர்.

1933ல் சத்தீஸ்கர் பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

விதர்பா கோட்டத்தை, மத்திய மாகாணத்தில் சேர்த்து, 24 அக்டோபர் 1936ல் மத்திய மாகாணங்கள் மற்றும் விதர்பா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Philip F. McEldowney (1980). Colonial Administration and Social Developments in middle India: The Central Provinces, 1861-1921 - Ph. D. Dissertation. University of Virginia. http://www.lib.virginia.edu/area-studies/SouthAsia/Ideas/CP/ch02regions.html. 
  2. 1931 Census of India. Accessed 12 November 2013
  3. Imperial Gazetteer of India, (New ed.), Oxford: Clarendon Press, 1908-1909. Vol. 10, pp. 24-25.
  4. Imperial Gazetteer of India, (New ed.), Oxford: Clarendon Press, 1908-1909. Vol. 10, Page 65.
  5. "Archived copy". Archived from the original on 2010-10-08. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. Olson, James S. and Robert Shadle, eds. Historical Dictionary of the British Empire, Vol. 1. Greenwood Publishing Group, UK 1996. P. 227.
  • Markovits, Claude (ed.) (2004). A History of Modern India: 1480-1950. Anthem Press, London.