ரேவா சமஸ்தானம்

ரேவா இராச்சியம் (Rewa State) , இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பகேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் ரேவா நகரம் ஆகும்.[2] 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரேவா இராச்சியம் 33,670 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13,27,385 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. [3] ரேவா இராச்சிய ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 17 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். [4]

ரேவா இராச்சியம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1140–1947
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ரேவா
Location of ரேவா
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் ரேவா இராச்சியத்தின் அமைவிடம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1140
 •  இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1901 33,670 km2 (13,000 sq mi)
Population
 •  1901 13,27,385 
மக்கள்தொகை அடர்த்தி 39.4 /km2  (102.1 /sq mi)
தற்காலத்தில் அங்கம் ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
Columbia-Lippincott Gazetteer. (New York: Columbia University Press, 1952) p. 369
1877-ஆம் ஆண்டில் ரேவா இராச்சிய மன்னர்
ரேவா இராச்சியத்தின் கோவிந்தகர் அரண்மனை, ஆண்டு 1882
19-ஆம் நூற்றான்டில் ரேவா இராச்சியக் கொடி[1]

வரலாறு

தொகு

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ரேவா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ரேவா இராச்சியத்தினர், 1812-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.[5] இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. ரேவா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 17 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

இது பிரித்தானிய இந்தியாவின் இந்தூர் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ரேவா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் விந்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ரேவா இராச்சியப் பகுதிகளை மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ரேவா ஆட்சியாளர்கள்

தொகு

ரேவா ஆட்சியாளர்களை மகாராஜா எனும் பட்டத்துடன் அழைக்கப்பட்டனர்.

  • வியாக்கிரா தேவ்
  • கரண் தேவ்
  • சோஹாக் தேவ்
  • சரங் தேவ்
  • விலாஸ் தேவ் (பிலாஸ்பூர் நகரத்தை நிறுவியவர்)
  • பிமல் தேவ்
  • அனிக் தேவ்
  • வளன் தேவ்
  • தல்கேஷ்வர் தேவ்
  • மல்கேஷ்வர் தேவ்
  • வாரியார் தேவ்
  • புல்லார் தேவ்
  • சிங் தேவ்
  • பைரம் தேவ்
  • நரஹரி தேவ்
  • பீர் தேவ்
  • சாலிவாகனன் தேவ்
  • வீர் சிங் தேவ்
  • பீர்பன் சிங் தேவ்
  • ராமச்சந்திர சிங் தேவ்
  • வீரபத்திர சிங் தேவ்
  • துரியோதன் சிங்
  • விக்கிரமாதித்தியா தேவ் (1608ல் ரேவா நகரத்தை நிறுவியவர்)
  • அமர் சிங்
  • அனுப் சிங்
  • போவ் சிங் தேவ்
  • அனிருத் சிங் தேவ்
  • அவதூத் சிங் தேவ்
  • அஜித் சிங் தேவ்
  • ஜெய் சிங் தேவ்
  • விஸ்வநாத் சிங் தேவ்
  • ரகுராஜ் சிங் தேவ்
  • வெங்கடராமன் ராமானுஜ பிரசாத் சிங் தேவ் பகதூர்
  • குலாப் சிங் தேவ்
  • சஜ்ஜன் சிங்
  • பிலிப் பானர்மேன்
  • திவான் பகதூர் பிரிஜ்மோகன் நாத்
  • எலியட் ஜேம்ஸ் டோவல் கோலின்
  • மார்தாண்ட சிங் தேவ்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Princely States of India K–Z
  2. "RewaCityOnline – Information about Rewa City". Archived from the original on 2016-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  3. "Imperial Gazetteer2 of India, Volume 9, page 378 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".
  4. "Imperial Gazetteer2 of India, Volume 9, page 378 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".
  5. Princely States of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவா_சமஸ்தானம்&oldid=4048662" இலிருந்து மீள்விக்கப்பட்டது