பகேல்கண்ட்
பகேல்கண்ட் அல்லது வகேல்கண்ட் (Bagelkhand) புவியியல் மண்டலம் என்பது மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர்களில் அமைந்த மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதிகளாகும்.
பகேல்கண்ட்
बघेलखंड | |
---|---|
Region | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் |
புவியியல்
தொகுபகேல்கண்ட் புவியியல் பகுதியில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டம், சத்னா மாவட்டம், ஷட்டோல் மாவட்டம், சித்தி மாவட்டம் மற்றும் சிங்கரௌலி மாவட்டங்களும் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சித்திரக்கூட மாவட்டம் அடங்கியுள்ளது. பகேல்கண்ட் மண்டலம் வடக்கிலும், கிழக்கிலும் கங்கைச் சமவெளியாலும், மேற்கில் புந்தேல்கண்ட் மண்டலத்தாலும், தெற்கில் விந்திய மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது.
பகேல்கண்ட் பகுதிகளை இராஜபுத்திர சோலாங்கியின் வகேலா குல மன்னர்களால் ஆளப்பட்டதால் இப்பகுதிக்கு வகேல்கண்ட் அல்லது பகேல்கண்ட் எனப் பெயராயிற்று.[1]
மத்திய பிரதேச பகேல்கண்ட் மண்டலத்தை விந்திய மண்டலம் என்றும் அழைப்பர்.