விந்தியப் பிரதேசம்
விந்தியப் பிரதேசம் (Vindhya Pradesh) (1948 - 1956) மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேச பகுதிகளில், 1948 முதல் 1956 முடிய செயல்பட்ட முன்னாள் மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் ரேவா ஆகும். இம்மாநிலம் 23,603 சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்தது.[1] இந்தியப் பிரிவினைக்குப் பின் 4 ஏப்ரல் 1948ல், மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர் நிலப்பரப்புகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த 35 சுதேச சமஸ்தானப் பகுதிகளைக் கொண்டு விந்தியப் பிரதேசம் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ரேவா ஆகும். இதன் வடக்கில் உத்தரப் பிரதேசம், தெற்கில் மத்தியப் பிரதேசம் இருந்தது.
விந்தியா | |||||
இந்திய மாநிலம் | |||||
| |||||
சின்னம் | |||||
1951 இந்தியாவின் வரைபடத்தில் விந்தியப் பிரதேசம் நடுவில் காட்டப்பட்டுள்ளது. | |||||
தலைநகரம் | ரேவா | ||||
வரலாறு | |||||
• | விந்தியப் பிரதேச மாநிலம் நிறுவுதல் | 1948 | |||
• | மாநில மறுசீரமைப்புச் சட்டம் | 1956 | |||
பரப்பு | 61,131.5 km2 (23,603 sq mi) | ||||
Population | |||||
• | 36,00,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 58.9 /km2 (152.5 /sq mi) | ||||
Pranab Kumar Bhattacharyya (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Delhi: Motilal Banarsidass. pp. 54–5. |
மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் படி, விந்தியப் பிரதேசம், மற்றும் மத்திய பாரதம் மாநிலங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2]
ஆட்சி நிர்வாகம்
தொகுவிந்திய பிரதேசம் புந்தேல்கண்ட், பகேல்கண்ட் என இரண்டு கோட்டங்களும், 10 மாவட்டங்களுடன் இருந்தது.
கோட்டங்களும் மாவட்டங்களும்
தொகுநவ்கோன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட புந்தேல்கண்ட் கோட்டத்தின் 6 மாவட்டங்கள்[1]
- டிக்கம்கர் மாவட்டம்
- சத்தர்பூர் மாவட்டம்
- தமோ மாவட்டம்
- பன்னா மாவட்டம்
- சாகர் மாவட்டம்
- ததியா மாவட்டம்
- சிந்த்வாரா மாவட்டம்
- ஓர்ச்சா மாவட்டம்
ரேவாவை தலைமையிடமாகக் கொண்ட பகேல்கண்ட் கோட்டத்தின் நான்கு மாவட்டங்கள்;[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Bhattacharyya, P. K. (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Delhi: Motilal Banarsidass. pp. 54–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 8426 909 13.
- ↑ "States Reorganisation Act, 1956". India Code Updated Acts. Ministry of Law and Justice, Government of India. 31 August 1956. pp. section 9. பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.