பன்னா மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

பன்னா மாவட்டம் (Panna district), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பன்னா நகரம் ஆகும். பன்னா மாவட்டம் சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

பன்னா மாவட்டம்
पन्ना जिला
பன்னாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாகர் கோட்டம்
தலைமையகம்பன்னா
பரப்பு7,135 km2 (2,755 sq mi)
மக்கட்தொகை1016520 (2011)
மக்கள்தொகை அடர்த்தி142/km2 (370/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை12.33%
படிப்பறிவு64.79%
பாலின விகிதம்905
மக்களவைத்தொகுதிகள்கஜூரஹோ நாடாளுமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைபன்னா
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 75
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட எல்லைகள்

தொகு

பன்னா மாவட்டத்தின் வடக்கில் உத்திரப் பிரதேசத்தின் பந்தா மாவட்டம், கிழக்கில் சத்னா மாவட்டம், தெற்கில் கட்னி மாவட்டம், தென்மேற்கில் தமோ மாவட்டம், வடமேற்கில் சத்தர்பூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

பன்னா மாவட்டப் பூர்வகுடிகளாக கோண்டு மக்களை வெற்றி கொண்டு, சந்தேல இராசபுத்திர மன்னர் சத்திரசால், கிபி 1731-இல் பன்னா இராச்சியத்தை நிறுவினர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, 1818 முதல் பன்னா இராச்சியம், சுதேச சமஸ்தானமாக, இந்தியப் பிரிவினைக்கு பின்னர் 1950 வரை நீடித்தது. 1950-இல் பன்னா இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

நிலவியல்

தொகு

பன்னா மாவட்டத்தில் கென் ஆறு, பாண்டவர் நீர்வீழ்ச்சி, காதா நீர்வீழ்ச்சி, பன்னா தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[1]

பொருளாதாரம்

தொகு

2006-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பன்னா மாவட்டத்தை வறுமை மிகுந்த இந்தியாவின் 250 மாவட்டங்களில் ஒன்ராக அறிவித்து, பன்னா மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கு வருகிறது.[2]

மாவட்ட நிர்வாகம்

தொகு

பன்னா மாவட்டம் அஜய்கர், அமன்கஞ்ச், குனௌர், பன்னா, பவாய், ஷாநகர் என ஆறு உட்கோட்டங்களை கொண்டது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பன்னா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,016,520 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 87.67% மக்களும்; நகரப்புறங்களில் 12.33% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 18.67% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 533,480 ஆண்களும் மற்றும் 483,040 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 905 பெண்கள் வீதம் உள்ளனர். 7,135 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 142 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 64.79% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.14% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.44% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 163,620 ஆக உள்ளது. [3]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 974,748 (95.89 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 35,214 (3.46 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை () ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 186 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 4,734 (0.47 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 37 (0.00 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 218 (0.02 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 965 (0.09 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

தொகு

வரலாற்றுக் காலத்தில் பன்னா மாவட்டம் வைரச் சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது. தற்போது இந்த வைரச்சுரங்கங்கள் மூடப்பட்டுவிட்ட்து.[4] ஆசியாவில் பன்னா மாவட்டத்தின் மஜாகோன் வைரச் சுரங்கம் மட்டுமே செயல்படுகிறது.[5]

போக்குவரத்து

தொகு

பன்னா நகரத்திற்கு அருகமைந்த வானூர்தி நிலையம் கஜுராஹோவில் உள்ளது. அருகமைந்த கஜுராஹோ தொடருந்து நிலையம் 45 கிமீ தொலைவிலும், சத்னா தொடருந்து நிலையம் 75 கிமீ தொலைவிலும் உள்ளது. பன்னா பேருந்து நிலையம், மத்தியப் பிரதேசத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்கிறது.

சுற்றுலாத் தலங்கள்

தொகு
பன்னா அருவியின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Panna – a city of diamonds". Panna district administration. Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 2010-08-18.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Panna District : Census 2011 data
  4. Streeter, Edwin W. "Precious stones and Gems". The Indian Diamond. George Bell & Sons (1898). Archived from the original on 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2010-08-18.
  5. "Panna Diamond Mines". Subh Yatra. Archived from the original on 2010-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-08-18.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னா_மாவட்டம்&oldid=3562340" இலிருந்து மீள்விக்கப்பட்டது