தமோ மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

தமோ மாவட்டம் (Damoh District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் தமோ ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

தமோ மாவட்டம்
दमोह जिला
தமோமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாகர் கோட்டம்
தலைமையகம்தமோ
பரப்பு7,306 km2 (2,821 sq mi)
மக்கட்தொகை1,264,219 (2011)
மக்கள்தொகை அடர்த்தி173/km2 (450/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை19.82%
படிப்பறிவு69.73
பாலின விகிதம்913
வட்டங்கள்7
மக்களவைத்தொகுதிகள்தமோ மக்களவை தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட நிர்வாகம்

தொகு

தமோ மாவட்டம் நான்கு வருவாய் உட்கோட்டங்களும்; தமோ, ஹட்டா, பதாரியா, ஜபேரா, பதேரா, பட்டியாகர் மற்றும் தெண்டுகேடா என வருவாய் வட்டங்களும்; இரண்டு நகராட்சிகளும்; நான்கு நகரப் பஞ்சாயத்துக்களும்; 460 பஞ்சாயத்து கிராமங்களும்; 1229 கிராமங்களும் கொண்டது. தமோ, ஹட்டா, பதாரியா, ஜபேரா, பதேரா, பட்டியாகர் மற்றும் தெண்டுகேடா என ஏழு ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது.[1]

அரசியல்

தொகு

இம்மாவட்டம் பதாரியா, தமோ, ஜபேரா மற்றும் ஹட்டா என நான்கு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. இந்நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமோ நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

பொருளாதாரம்

தொகு

வறண்ட வானிலை கொண்டது இம்மாவட்டம். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாக தமோ மாவட்டம் இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. [2]

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,264,219 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.18% மக்களும்; நகரப்புறங்களில் 19.82% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.63% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 661,873 ஆண்களும் மற்றும் 602,346 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 910 பெண்கள் வீதம் உள்ளனர். 7,306 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 173 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.73% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 79.27% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.22% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 191,968 ஆக உள்ளது. [3]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,186,420 (93.85 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 47,966 (3.79 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 25,005 (1.98 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மாவட்ட எல்லைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Profile of District Damoh
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. District : Census 2011 data[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தமோ_மாவட்டம்&oldid=3930697" இலிருந்து மீள்விக்கப்பட்டது