பகேல்கண்ட் முகமை

பகேல்கண்ட் முகமை (Bagelkhand Agency), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் பகேல்கண்ட் பிரதேசத்தின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1871-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.

பகேல்கண்ட் முகமை
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை
1871–1933 [[புந்தேல்கண்ட் முகமை|]]
Location of Bagelkhand Agency
Location of Bagelkhand Agency
மத்திய இந்திய முகமையின் கிழக்கில் 3 பகேல்கண்ட் முகமையின் பகுதிகள்
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால இந்தியா
 •  நிறுவப்பட்டது 1871
 •  Disestablished 1933
பரப்பு
 •  1901 37,100 km2 (14,324 sq mi)
Population
 •  1901 15,55,024 
மக்கள்தொகை அடர்த்தி 41.9 /km2  (108.6 /sq mi)

1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பகேல்கண்ட் முகமையின் மொத்த பரப்பளவு 14,323 சதுர மைல்கள் (37,100 km2) மற்றும் மக்கள் தொகை 15,55,024 ஆகும். கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால், 1891-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை விட 1901-ஆம் ஆண்டில் மக்கள் 11% வீழ்ச்சி கண்டது. 1933-ஆம் ஆண்டில் பகேல்கண்ட் முகமையை புந்தேல்கண்ட் முகமையுடன் இணைக்கப்பட்டது.[1]

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் பகேல்கண்ட் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று விந்தியப் பிரதேசம், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

பகேல்கண்ட் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்களும், ஜமீன்களும்

தொகு

சுதேச சமஸ்தானங்கள்

தொகு
  1. ரேவா சமஸ்தானம்
  2. மைகார் சமஸ்தானம்
  3. நாகோட் சமஸ்தானம்
  4. சோகாவல் சமஸ்தானம்
  5. ஜசோ சமஸ்தானம்
  6. கோத்தி சமஸ்தானம்
  7. பரௌந்தா சமஸ்தானம்
  8. கலிஞ்சர் சமஸ்தானம்
  9. பல்தேவ் சமஸ்தானம்
  10. காம்தா-ரஜௌலா சமஸ்தானம்
  11. தரோன் சமஸ்தானம்
  12. பஹ்ரா சமஸ்தானம்
  13. பைசௌந்தா சமஸ்தானம் [2]

ஜமீன்தார்கள்

தொகு
  1. சோகாபூர்
  2. ஷாப்பூர்
  3. ஜெயித்பூர்
  4. அமர்கண்டக்
  5. நிக்வானி
  6. அனுப்பூர்
  7. வைகுந்த்பூர்
  8. சந்தியா
  9. தன்காவான்
  10. சிங்பனா

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1.    "Bagelkhand". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 199–200. 
  2. Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984


"https://ta.wikipedia.org/w/index.php?title=பகேல்கண்ட்_முகமை&oldid=3388358" இலிருந்து மீள்விக்கப்பட்டது