கூக்ளி-சூச்சுரா

கூக்ளி-சூச்சுரா ( Hugli-Chuchura) நகரை கூக்ளி என்றும் சின்சுரா என்றும் அழைப்பர். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத்தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது.

கூக்ளி-சூச்சுரா
হুগলী-চুঁচুড়া
கூக்ளி-சின்சுரா
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்ளி
பரப்பளவு
 • மொத்தம்17.29 km2 (6.68 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,77,259
 • அடர்த்தி10,000/km2 (27,000/sq mi)
மொழிகள்
 • Officialவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
712101 712102 712103 712105 712106
Telephone code033

அமைவிடம்

தொகு

இந்நகரம் போர்த்துகீசியர்களால் 1579 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கும் முன்னான ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர். இந்நகரின் அமைவிடம் 22°54′N 88°23′E / 22.90°N 88.39°E / 22.90; 88.39 ஆகும்.[1]

மக்கட்தொகை

தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,77,259 ஆகும்.[2] இதில் ஆண்கள் 51% பெண்கள் 49% ஆகும். இந்நகரின் கல்வியறிவு 91.10% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 93.81% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 88.39% ஆகவும் உள்ளது. மக்கட்தொகையில் 9% பேர் 6 வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள்.

விழாக்கள்

தொகு

இந்நகரில்,

  • துர்கா பூஜை
  • கார்த்திக் பூஜை
  • ஜெகதாத்ரி பூஜை
  • நவபார்ஷோ பூஜை
  • பாசந்தி பூஜை
  • மனாஷா பூஜை

போன்றவை முக்கிய விழாக்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Yahoo maps location of Hugli-Chuchura". Yahoo maps. பார்க்கப்பட்ட நாள் 2008-12-28.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூக்ளி-சூச்சுரா&oldid=2997154" இலிருந்து மீள்விக்கப்பட்டது