கவாச்
கவாச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி தொடருந்து பாதுகாப்பு கருவியாகும். இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆய்வு அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.[1][2]
பரிசோதனை
தொகுதெற்கு மத்திய ரயில்வேயில் சிக்கந்தராபாத் பிரிவில் குல்லாகுடா-சிட்கிட்டா தொடருந்து நிலையங்களுக்கிடையே கவாச் தொழில்நுட்பம் மார்ச் 4, 2022ல் பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு தொடருந்து என்ஜின்கள் ஒரே இருப்புப் பாதையில் எதிர் எதிர் திசையில் மோதுவது போல் போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இவற்றில் ஒரு என்ஜினில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவும் மற்றொரு என்ஜினில் ரயில்வே போர்டு தலைமை செயல் அதிகாரியும் பயணம் செய்தனர். இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்டிருந்த கவாச் கருவிகள் ஒரே தடத்தில் எதிர் எதிரே தொடருந்துகள் வருவதை கண்டுகொண்டு சுமார் 380 மீட்டர் இடைவெளியில் என்ஜின்களை தானாகவே நிறுத்தியது. இதன் மூலம் கவாச் கருவி பரிசோதனை வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3][4][5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Press Release".
- ↑ "Handbook on Train Collision Avoidance System (TCAS)" (PDF).
- ↑ "ரயில்களின் மோதலை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்: என்ன அது?". Puthiyathalaimurai. https://www.puthiyathalaimurai.com/newsview/131391/-Kavach--technology-to-prevent-trains-collisions.
- ↑ "Explained: Kavach, the Indian technology that can prevent two trains from colliding".
- ↑ "Indian Railways: Watch video of how'Kavach' averts collision of two speeding trains".