இரயில்வே பாதுகாப்பு ஆணையம்
இந்திய இரயில்வே பாதுகாப்பு ஆணையம் என்பது இந்திய அரசின் ஆணையமாகும். இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த ஆணையததின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையாளரின் தலைமையிடம் லக்னோவில் உள்ளது.[7][8] இது இரயில்வே சட்டம், 1989-ன் படி, இந்தியாவில் இரயில் பாதுகாப்பு ஆணையமாக செயல்படுகிறது. இந்த ஆணையம் கடுமையான இரயில் விபத்துகளை விசாரிக்கிறது.
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 நவம்பர் 1961[1] |
முன்னிருந்த |
|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | அசோக் மார்க், வடகிழக்கு இரயில்வே வளாகம், லக்னோ, உத்தரப் பிரதேசம்[2] |
அமைப்பு தலைமை | |
மூல அமைப்பு | இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் |
வலைத்தளம் | https://safety.indianrail.gov.in/sims/ |
ஆணையத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பு
தொகுஇந்த ஆணையம் லக்னோவில் உள்ள இரயில்வே பாதுகாப்புக்கான முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையரின் (CCRS) தலைமையில் உள்ளது. முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையாளர் இரயில்வே பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும், இந்திய அரசின் முதன்மை தொழில்நுட்ப ஆலோசகராகவும் செயல்படுகிறார். இரயில்வே பாதுகாப்புக்கான முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 9 இரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் 17 மண்டல இரயில்வேக்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றனர். மேலும் கொல்கத்தா மெட்ரோ, தில்லி மெட்ரோ, சென்னை மெட்ரோ மற்றும் கொங்கண் இரயில்வே ஆகியவைகளும் இந்த ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.[9] லக்னோவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்தில் முதன்மை இரயில்வே தலைமைப் பாதுகாப்பு ஆணையருக்கு உதவிட 5 துணை ஆணையர்கள் உள்ளனர். மேலும் மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒருவர் வீதம் 2 கள துணை ஆணையர்கள் உள்ளனர்.[10]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Commission of Railway Safety". www.crs.gov.in. Archived from the original on 9 December 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "Commission of Railway Safety". www.crs.gov.in. Archived from the original on 9 December 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "Commission of Railway Safety - Directory". www.crs.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-08-15.
- ↑ "Rail Safety Commissioner begins probe - Indian Express". archive.indianexpress.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.
- ↑ "Commission of Railway Safety". www.crs.gov.in. Archived from the original on 27 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.
- ↑ "Commission of Railway Safety". www.crs.gov.in. Archived from the original on 27 November 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "Commission of Railway Safety பரணிடப்பட்டது 2012-02-19 at the வந்தவழி இயந்திரம்." Ministry of Civil Aviation. Retrieved on 19 February 2012. "Ashok Marg, NE Railway compound , Lucknow- 226001."
- ↑ "Annual Report 2009-2010[தொடர்பிழந்த இணைப்பு]." Commission of Railway Safety. 1. Retrieved on 19 February 2012.
- ↑ "MUD must appoint its own Commissioner for Metro Rail Safety: E.Sreedharan". RailNews Media India Ltd (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.
- ↑ "Commission of Railway Safety". www.crs.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.