சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன. மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெற்றோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.

சென்னை மெட்ரோ
Chennai Metro
தகவல்
உரிமையாளர்சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL)[1]
அமைவிடம்சென்னை, இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்5 (கட்டம் I & II)
நிலையங்களின்
எண்ணிக்கை
41 (கட்டம் I + விரிவு)
தலைமையகம்சென்னை
இணையத்தளம்http://www.chennaimetrorail.gov.in/
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
29 சூன் 2015; 8 ஆண்டுகள் முன்னர் (2015-06-29)
இயக்குனர்(கள்)சிஎம்ஆர்எல்
வண்டிகளின் எண்ணிக்கை42 (முதற்கட்டம்)
தொடர்வண்டி நீளம்86.5 மீ
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்117.046 km (72.73 mi) [முதற்கட்டம், விரிவாக்கம் மற்றும் இரண்டாம் கட்டம்]
இருப்புபாதை அகலம்சீர்தர அகலம்
மின்னாற்றலில்25 கேவி, 50 ஹெர்ட்ஸ் ஏசி மேற்புற சங்கிலியம் வழியே
உச்ச வேகம்80 km/h (50 mph)
வழித்தட வரைபடம்

Schematic diagram of Chennai Metro's lines.

சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவின் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் கணினி முறைமை வருவாயைத் தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வண்ண வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் ஐதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்கு பிறகு இந்தியாவில் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பாகும். சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் சென்னை மெற்றோ உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நிலத்தடி மற்றும் உயர்ந்த நிலையங்களின் கலவையாகும். மேலும் நிலையான பாதையினைப் பயன்படுத்துகிறது. சேவைகள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாறுபடும். சேவையானது 06:00 முதல் 22:00 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்குகின்றன. இந்த ரயில்களில் எதிர்காலத்தில் 6 நீட்டிக்கக்கூடிய நீளமான நான்கு பயிற்சியாளர்கள் உள்ளன.

சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார்.[2]

வரலாறு தொகு

புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு பொதுப்போக்குவரத்துத் திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக, தில்லி மெட்ரோ இருப்புவழி கழகத்தின் தலைவர், திரு. ஈ. ஸ்ரீதரன், திட்டவரைவினை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அளித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு, பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற மு. கருணாநிதியால் மீண்டும் எடுக்கப்பட்டு, கோயம்பேட்டில் 2009ஆம் ஆண்டு ஜீன் 10 நாளன்று அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பின் செயல் வடிவம் கொடுக்கப்பட்டு, தற்போது இரண்டு வழித்தடங்கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதோடு, விரிவாக்கப்ப பணிகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டின் 2007-2008 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மெற்றோ தொடருந்துத் திட்டம் உள்ளடக்கப்பட்டது. அப்போது, விரிவான திட்ட அறிக்கையை ஆயத்தம் செய்ய தமிழக அரசு சார்பில், இத்திட்டத்திற்கான தொடக்க நிதியாக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டது. மெற்றோபணிகளுக்காக, தமிழக அமைச்சரவை, நவம்பர் 7, 2007 அன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கென ”சென்னை மெற்றோ இருப்புவழி லிமிட்டெட்" என்ற நிறுவனத்தை அரசு நிறுவியது.

திட்ட மதிப்பீடு தொகு

2007ஆம் ஆண்டில், இத்திட்டம் வரையப்பட்டபோது, இதன் மதிப்பீடு 9565 கோடியாக இருந்தது. தற்போது இத்திட்டத்திற்கான முதல் கட்டத்திற்கு தோராயமான மதிப்பீடு, சற்றொப்ப 14,600 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

திட்ட நிதி தொகு

நடுவண் அரசும், தமிழக அரசும், இத்திட்டத்திற்கு நிதி பங்களிக்க முன்வந்தன. மேலும், ஜப்பானிய வங்கியொன்றும் இத்திட்டத்திற்குப் பங்களித்துள்ளது.

முதல் கட்டம் தொகு

திட்ட விரிவறிக்கையின்படி, முதல் கட்டத்தில் இரண்டு மெற்றோ இருப்புவழிகள் அமைக்கப்பட்டன.

இரண்டாம் கட்டம் தொகு

இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கபட உள்ளது.

சோதனை ஓட்டம் தொகு

இரண்டு வழித்தடங்களின் மொத்தத் தொலைவான 45.1 கிலோ மீட்டரில், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனையில் 800 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில், மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அங்கு சுமார் 2 முதல் 3 மாதம் காலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டத்தின்போது மெட்ரோ ரயில் மொத்தம் 1600 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டது. இதே போன்று தற்போது தயாரிக்கப்பட்டு வரும் அனைத்து மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கும் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.[3] [4]

முதல் இருப்புவழி தொகு

வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை பன்னாட்டு விமான நிலையம்

நீளம்: 23.085 கீ. மீ ( இதில் 14.3 கீ. மீ தரைக்கடியில்)

Chennai Metro Phase I

வழித்தடம் 1: விம்கோ நகர் — சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் [32.1 கிமீ]
வழித்தடம் 2: சென்னை சென்ட்ரல் — புனித தோமையார் மலை [22 கிமீ]

                       
               
 
 
 
 
விம்கோ நகர் மெற்றோ நிலையம்
                       
திருவொற்றியூர்
                       
கவுரி ஆசிரமம்
                       
தாங்கல்
                       
சுங்கச்சாவடி (சென்னை)
                       
தண்டையார்பேட்டை
                       
                       
கொருக்குப்பேட்டை
                 
 
 
 
வண்ணாரப்பேட்டை
மண்ணடி மெட்ரோ நிலையம்
                       
பேசின் பாலம் தொடருந்து நிலையம்
                       
                   
 
 
உயர்நீதிமன்றம்
சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்
               
 
 
 
 
சென்னைக் கோட்டை
                 
 
   
சென்னை மத்திய மெட்ரோ நிலையம்
எழும்பூர்
           
 
   
 
   
சென்ட்ரல்
நேரு பூங்கா மெட்ரோ நிலையம்
           
 
   
 
 
 
சென்னைப் பூங்கா
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மெற்றோ நிலையம்
                   
 
 
பூங்கா நகர்
தமிழ்நாடு சட்டமன்றம்
             
 
 
 
சிந்தாரிப்பேட்டை
பச்சையப்பன் கல்லூரி மெற்றோ நிலையம்
                   
பார்க்க MRTS
செனாய் நகர் மெற்றோ நிலையம்
               
அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ நிலையம்
               
எல்ஐசி மெட்ரோ நிலையம்
அண்ணாநகர் கோபுரம் மெற்றோ
               
திருமங்கலம்
 
 
 
   
 
 
 
ஆயிரம்விளக்கு மெற்றோ நிலையம்
               
               
கோயம்பேடு மெற்றோ நிலையம்
               
ஜெமினி
கோயம்பேடு பணிமனை
               
சென்னை புறநகர் பேருந்து நிலையம்
               
               
தேனாம்பேட்டை மெற்றோ நிலையம்
அரும்பாக்கம் மெற்றோ நிலையம்
               
வடபழனி மெற்றோ நிலையம்
 
 
 
         
சேமியர் சாலை
அசோக் நகர் மெட்ரோ நிலையம்-கேகே நகர்
               
சைதாப்பேட்டை
               
TANSIDCO
               
சின்னமலை மெற்றோ நிலையம்
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம்
     
 
 
 
       
கிண்டி மெற்றோ நிலையம்
Officers Training Academy
               
               
   
 
 
 
     
பரங்கிமலை தொடருந்து நிலையம்
               
மீனம்பாக்கம்
 
 
           
பார்க்க செபதொ
விமான நிலையம்
               
மெட்ரோ தொடருந்து
நிலையம்
முதல்
நிலையத்தில்
இருந்து
தொலைவு (கீ.மீ)
தரை மட்டத்தில்
இருந்து ஆழம்/உயரம்
(மீட்டரில்)
மேடை எண்ணிக்கை
விவரம்
நிலைய அமைப்பு
வண்ணாரப்பேட்டை 0.5 -12.009 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
மண்ணடி 2.0 -13.469 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
சென்னை கோட்டை 3.3 -12.499 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
சென்னை சென்ட்ரல் 4.4 -17.203 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
சென்னை பெருநகர
வளர்ச்சிக் குழுமக் கட்டிடம்
5.6 -14.190 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
எல்ஐசி 7.3 -14.096 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
ஆயிரம் விளக்கு 8.3 -13.853 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
அண்ணா மேம்பாலம் 9.5 -14.569 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
தேனாம்பேட்டை 10.7 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
சேமியர்ஸ் சாலை 12.1 -13.917 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
சைதாப்பேட்டை 13.8 -12.482 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
சின்ன மலை 15.0 12.382 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
கிண்டி 16.2 13.468 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
ஆலந்தூர் 17.8 9.343 மத்திய மேடை உயர் பாலத்தில், நேர்
அலுவலர் பயிற்சி அக்கடமி 18.9 13.382 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
இந்தியன் ஏர்லைன்ஸ் காலனி 20.6 11.838 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
மீனம்பாக்கம் 21.5 12.929 இருபக்க மேடை உயர் பாலத்தில், சற்று வளைந்து
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 22.9 8.918 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்

இரண்டாம் இருப்புவழி தொகு

சென்னை சென்ட்ரல் - சென்னை எழும்பூர் - வேப்பேரி - செனாய் நகர் - அண்ணா நகர் - திருமங்கலம் - அரும்பாக்கம் - சென்னை புறநகர் பேருந்து நிலையம் - வடபழனி - அசோக் நகர் - ஈக்காட்டுத்தாங்கல் - ஆலந்தூர் - பரங்கி மலை.

நீளம்: 21.961 கீ. மீ ( இதில் 9.7 கீ. மீ தரைக்கடியில்)

மெட்ரோ தொடருந்து
நிலையம்
முதல்
நிலையத்தில்
இருந்து
தொலைவு (கீ.மீ)
தரை மட்டத்தில்
இருந்து ஆழம்/உயரம்
(மீட்டரில்)
மேடை எண்ணிக்கை
விவரம்
நிலைய அமைப்பு
சென்னை சென்ட்ரல் 0.4 -17.203 இருபக்க மேடை தரைக்கடியில், நேர்
எழும்பூர் 1.8 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து
நேரு பூங்கா 3.09 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து
கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி 3.9 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து
பச்சையப்பன் கல்லூரி 4.9 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், சற்று வளைந்து
செனாய் நகர் 6.1 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
அண்ணா நகர் - கிழக்கு 7.1 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
அண்ணா நகர் கோபுரம் 8.3 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
திருமங்கலம் 9.1 -14.069 மத்திய மேடை தரைக்கடியில், நேர்
கோயம்பேடு 10.9 13.274 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
சென்னை புறநகர் பேருந்து நிலையம் (CMBT) 12.3 13.029 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
அரும்பாக்கம் 13.7 13.395 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
வடபழனி 14.8 21.5 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
அசோக் நகர் 16.2 13.365 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
ஈக்காட்டுதாங்கல் 18.8 13.224 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்
ஆலந்தூர் 20.3 14.843 மத்திய மேடை உயர் பாலத்தில், நேர்
பரங்கி மலை 21.5 8.782 இருபக்க மேடை உயர் பாலத்தில், நேர்

கட்டண தகவல்கள் தொகு

தற்போது இயக்கப்படும் ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான 10.15 கி.மீ மெட்ரோ ரயில் வழித்தடத்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10ம், அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 40ம் வசூலிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Home Page of Chennai Metro Rail Limited". Chennaimetrorail.gov.in இம் மூலத்தில் இருந்து 2015-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150407235136/http://www.chennaimetrorail.gov.in/. பார்த்த நாள்: 2010-08-16. 
  2. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article7366949.ece?widget-art=four-rel
  3. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி தினமணி 07.11.2013
  4. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தினமணி
  1. தாண்டி மெட்ரோ ரயில் பணிகள் மும்முரம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மெட்ரோ&oldid=3756924" இருந்து மீள்விக்கப்பட்டது