வடபழனி மெற்றோ நிலையம்

(வடபழனி மெட்ரோ நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


வடபழனி மெற்றோ நிலையம் (Vadapalani metro station) சென்னை மெற்றோவின் 2வது வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம்-பரங்கிமலை தொடருந்து நிலைய தாழ்வாரம் II உடனான உயரமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் வடபழனி மற்றும் கோடம்பாக்கத்தின் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.


வடபழனி
Logo of Chennai Metro சென்னை மெட்ரோ நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வடபழனி, சென்னை, தமிழ்நாடு 600026
ஆள்கூறுகள்13°03′02″N 80°12′43″E / 13.05050°N 80.21208°E / 13.05050; 80.21208
ஏற்றம்14 மீட்டர்கள் (46 அடி)
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL)
தடங்கள்பச்சை வழித்தடம் செம்மஞ்சள் வழித்தடம்  Inter Corridor Line 
நடைமேடைபக்க நடைமேடை
நடைமேடை-1 → பரங்கிமலை மெட்ரோ
நடைமேடை-2 → நேரு பூங்கா
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட, இரட்டை வழித்தடம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்தானுந்து தரிப்பிடம் உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இலவச மிதிவண்டி தானுந்து தரிப்பிடம் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSVA
வரலாறு
திறக்கப்பட்டதுசூன் 29, 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-06-29)
மின்சாரமயம்ஒற்றை முனையம் 25 கிவா, 50 ஹெர்ட்சு மாமி தலைமேல் வழி
சேவைகள்
முந்தைய நிலையம் Logo of Chennai Metro சென்னை மெட்ரோ அடுத்த நிலையம்
அரும்பாக்கம் பச்சை வழித்தடம் அசோக் நகர்
நீல வழித்தடம்
(Inter-Corridor Service)
அசோக் நகர்
பவர் ஹவுஸ் செம்மஞ்சள் வழித்தடம் சாலிகிராமம்
அமைவிடம்
Map

கோயம்பேடு-ஆலந்தூர் வழித்தடத்தில் முக்கிய நிலையங்களில் ஒன்றான வடபழனி நிலையம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கியது. [1]

கட்டுமான வரலாறு

தொகு

இந்த நிலையத்தை ஒருங்கிணைந்த கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு (சி.சி.சி.எல்) கட்டியது. கோயம்பேடு, அரும்பாக்கம், CMBT, மற்றும் அசோக் நகர் நிலையங்கள் ஒருங்கிணைந்து கட்டமைக்க 1,395.4 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. [2]

நிலையம்

தொகு

இந்த நிலையம் ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் ஆற்காடு சாலை சந்திப்பில் சாலையிலிருந்து 16 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட நிலையமாகும்.[3] இந்த நிலையம் சென்னை மெற்றோவின் மிக உயரமான நிலையமாகும். [4]

சி.எம்.ஆர்.எல். தகவலின்படி, இந்த நிலையத்தில் குறைந்தது 12,000 பேர் கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. [1]

தளவமைப்பு

தொகு
ஜி தெரு நிலை வெளியே/நுழைவு
எல் 1 மெஸ்ஸானைன் கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெட்ரோ கார்டு வழங்கும் இயந்திரங்கள், கடக்கும் வழி
எல் 2 பக்க மேடை எண் -1, இடதுபுறத்தில் கதவுகள் திறக்கப்படும் 
தென்பகுதி நோக்கி → செயின்ட் தாமஸ் மவுண்ட்
வடபகுதி நோக்கி → சென்னை மத்திய
பக்க மேடை எண் -2, கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் 
எல் 2

வசதிகள்

தொகு

இணைப்பு

தொகு

2014ஆம் ஆண்டில், சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) வடபழனி மெற்றோ நிலையத்தை ஃபோரம் விஜயா மாலுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது. [1]

ஆதரவு உள்கட்டமைப்பு

தொகு
 
வடபழனி மெற்றோ நிலையத்திற்கு கீழே உள்ள வடபழனி சந்திப்பு

2013ஆம் ஆண்டு நிலவரப்படி, கத்திப்பாரா மற்றும் வடபழனிக்கு இடையில் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள பகுதி வழியாக சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும் 12,000 வாகனங்கள் உச்ச நேரங்களில் வடபழனி-கோயம்பேடு பிரிவு வழியாகச் செல்கின்றன. ஒவ்வொரு நாளும் மொத்தம் 185,000 வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துகின்றன. [4]

கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெற்றோ நிலையங்களுடன், கடைகளுக்கோ அல்லது அலுவலக இடங்களுக்கோ இடத்தைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் வடபழனி மெற்றோ நிலையம் உருவாக்கப்படும். தீ பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நிலையத்தில் 50,000 முதல் 100,000 லிட்டர் திறன் கொண்ட நிலத்தடி நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. [5]

சந்திப்பைக் கடந்து செல்ல இந்த நிலையத்தில் ஒருங்கிணைந்த மேம்பாலம் உள்ளது. 450 மீட்டர் நீளமுள்ள நான்கு மேம்பாலம் 694,3 மில்லியன் செலவில் மத்தியப் பகுதி வடபழனி மெற்றோ இரயில் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. மாநகரப் பேருந்துகள் பயணிகளை இறக்கி பயணிகளை அழைத்துச் செல்ல ஏதுவாக நிலையத்திற்குள் தனிவழி கட்டப்பட்டுள்ளது. [4]

சி.எம்.ஆர்.எல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Sekar, Sunitha (19 November 2014). "Vadapalani Metro station to be connected to mall". The Hindu (Chennai). http://www.thehindu.com/news/cities/chennai/chen-infra/vadapalani-metro-station-to-be-connected-to-mall/article6612195.ece. 
  2. "Arumbakkam metro station almost complete". The Hindu (Chennai). 10 September 2013. http://www.thehindu.com/news/cities/chennai/arumbakkam-metro-station-almost-complete/article5110276.ece. 
  3. "வடபழனியில் இரண்டு மேம்பாலங்கள்" (in ta). Dinamalar (Chennai). 22 December 2014. 
  4. 4.0 4.1 4.2 "Highways to soon flag off work on Vadapalani flyover". The Hindu (Chennai). 30 May 2013. 
  5. Express News Service (30 October 2014). "Metro Rail Stations to Sport Snazzy Look". The New Indian Express (Chennai). http://www.newindianexpress.com/cities/chennai/Metro-Rail-Stations-to-Sport-Snazzy-Look/2014/10/30/article2499052.ece. 

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

  • நகர்ப்புற ரெயில். நிகர - உலகின் அனைத்து மெட்ரோ அமைப்புகளின் விளக்கங்கள், ஒவ்வொன்றும் அனைத்து நிலையங்களையும் காட்டும் திட்ட வரைபடத்துடன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடபழனி_மெற்றோ_நிலையம்&oldid=3962830" இலிருந்து மீள்விக்கப்பட்டது