சென்னை பூங்கா தொடருந்து நிலையம்

பூங்கா தொடருந்து நிலையம் அல்லது சென்னை பூங்கா தொடருந்து நிலையம் (Chennai Park railway station, நிலையக் குறியீடு:MPK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பூங்கா நகர் அருகில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் வடக்கு பகுதியில் சென்னை மத்திய இரயில் நிலையமும் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.

சென்னை பூங்கா
சென்னை புறநகர் இரயில் நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
சென்னை பூங்கா தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை 4, பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°4′49″N 80°16′22″E / 13.08028°N 80.27278°E / 13.08028; 80.27278
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMPK
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
முந்தைய பெயர்கள்தென்னக இரயில்வே
பயணிகள்
பயணிகள் 440,000/நாள் ஒன்றுக்கு (2012 ஆம் ஆண்டு நிலவரப்படி)
அமைவிடம்
சென்னை பூங்கா is located in சென்னை
சென்னை பூங்கா
சென்னை பூங்கா
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
சென்னை பூங்கா is located in தமிழ் நாடு
சென்னை பூங்கா
சென்னை பூங்கா
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சென்னை பூங்கா is located in இந்தியா
சென்னை பூங்கா
சென்னை பூங்கா
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வரலாறு

தொகு
 
சென்னை கடற்கரையை நோக்கி செல்லும் புறநகர் இரயிலானது, நடைமேடை 1யை வந்தடைகிறது

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1] சென்னை பூங்கா ரயில் நிலையம் வரும் முன்பு இந்த பகுதி வெளியூர் மக்கள் வந்து தங்க ஏதுவாக சென்னை கொடைவள்ளல் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் கட்டிய மிகப்பெரிய இலவச சத்திரம் இருந்தது.ரயில்வே துறை நிலம் பெற்று கொண்டதை அடுத்து தற்போது அது சிறிய அளவில் காணப்படுகிறது.

போக்குவரத்து

தொகு

2012 நிலவரப்படி, இந்த நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 440,000 பயணிகளை கையாளுகிறது.

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

தொகு