சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம்

(சென்னைக் கடற்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் (Chennai Beach railway station, நிலையக் குறியீடு: MSB) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்நிலையம் மெட்ராசு கடற்கரை என்ற பெயரால் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பாரிமுனையில் உள்ள தெற்கு ரயில்வே வலையமைப்பின் ஓர் தொடருந்து நிலையமாக, சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் இயங்குகிறது. சென்னை மாநகரத்திலிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் விதமாக உருவாக்கப்பட்ட, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்து சென்னை புறநகர் இருப்புவழி என்ற பெயரில் தொடருந்து சேவையை இந்த நிலையம் வழங்குகிறது. மேலும் இந்நிலையம் சென்னை பறக்கும் இரயில் திட்டத்தையும் ஒரு சில பயணிகள் இரயில்களின் புறநகர் சேவைகளுக்கும் சேவை செய்கிறது. அதேவேளையில் பறக்கும் இரயில் திட்டத்தின் வடக்கு முனையமாகவும், இந்நிலையம் செயல்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற அருகில் இருந்ததால் இந்த தொடருந்து நிலையத்துக்கு சென்னை கடற்கரை என பெயரிடப்பட்டது. இது பின்னர் சென்னை துறைமுகத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மெரினா கடற்கரையை முன்னிலைப்படுத்திய பெயர் இதுவல்ல. பறக்கும் இரயில் திட்டத்தில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரைவிளக்கு போன்ற நிலையங்கள் சென்னை மெரீனா கடற்கரைக்கான பயணிகள் சேவையை வழங்குகின்றன. இரயில் நிலையத்தில் 1500 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு திறந்த வெளி வாகன நிறுத்துமிட வசதி உள்ளது.[1] இந்த நிலையம் உயர் நீதிமன்றம் மற்றும் பிராட்வே எனப்படும் பாரிமுனைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையத்திற்கு வெளியே சிறிய கடைகளில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பர்மா பசார் உள்ளது. பெரும்பாலான அரசாங்க அலுவலகங்கள் மற்றும் சில வங்கிகளின் தலைமையகங்கள் மற்றும் பாரி குழுமத்தின் அலுவலகங்கள் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. சென்னையின் இரயில் வலைப்பின்னலின் பெரும்பகுதிக்கு ஒரு மைய முனையமாக இருப்பது மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் வடமேற்கு சென்னைக்கு செல்ல வேண்டிய பயணிகளுக்கான முக்கிய பேருந்து போக்குவரத்து மையமாகவும் இந்த நிலையம் விளங்குகிறது. உள்ளூர் பேருந்துகளில் பெரும்பாலானவை நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

சென்னை கடற்கரை தொடருந்து நிலையம்
மெட்ராசு கடற்கரை
சென்னை புறநகர் இரயில் நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
சென்னை கடற்கரை இரயில் நிலையத்தின் முக்கிய கட்டிடம்
பொது தகவல்கள்
அமைவிடம்ராஜாஜி சாலை, சென்னை, தமிழ்நாடு 600 001, இந்தியா
ஆள்கூறுகள்13°05′32″N 80°17′31″E / 13.09222°N 80.29190°E / 13.09222; 80.29190
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்
நடைமேடை8
இருப்புப் பாதைகள்13
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMSB
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1928
மின்சாரமயம்11 மே 1931
முந்தைய பெயர்கள்தென்னக இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் 3,00,000 ஒரு நாளைக்கு
சேவைகள்
1000 புறநகர் இரயில்,100 விரைவு இரயில்,
அமைவிடம்
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் மெட்ராசு கடற்கரை is located in சென்னை
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் மெட்ராசு கடற்கரை
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம்
மெட்ராசு கடற்கரை
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் மெட்ராசு கடற்கரை is located in தமிழ் நாடு
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் மெட்ராசு கடற்கரை
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம்
மெட்ராசு கடற்கரை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் மெட்ராசு கடற்கரை is located in இந்தியா
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் மெட்ராசு கடற்கரை
சென்னை கடற்கரை தொடருந்து நிலையம்
மெட்ராசு கடற்கரை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

அமைவிடம் தொகு

சென்னை நகரின் கிழக்கு பகுதியில் சென்னை கடற்கரை இரயில் நிலையம் அமைந்துள்ளது. துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையை இப்பாதை அடைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஜார்ஜ் டவுன் இதன் அருகில் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையம் வடக்கு மற்றும் தெற்கு பாதைகளை ஒன்றிணைக்கும் இடமாகவும் செயல்படுகிறது. சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பின், மையப் புள்ளியாக அமைகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, இந்நிலையம் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் இராஜாஜி சாலையும், கிழக்கில் சென்னை துறைமுகம் போன்றவை இவ்வளாகத்திற்கு எல்லையாக உள்ளன. பிரதான நுழைவாயில் இராஜாஜி சாலையில் பொது தபால் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னை துறைமுகத்துடன் ஒரு நடை பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

வசதிகள் தொகு

இந்நிலையத்தில் இரண்டு நடை பாலங்கள் உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு முனைகளில், தலா ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எட்டாவது நடைமேடையின் வழியாக நான்காவது நடை மேடையை இப்பாலங்கள் இணைக்கின்றன. தெற்கு முனையிலுள்ள கால் நடை பாலம் சென்னை துறைமுகம் வரை நீண்டு, துறைமுகத்தை ரயில் நிலையத்துடன் இணைக்கிறது.[2] பின்னர் இராஜாஜி சாலையின் மேற்கு புறத்திலும் நடைபாலம் நீட்டிக்கப்பட்டது. இரயில்வே திட்டத்தின் கீழ் பொது நிதியில் இருந்து பத்து முன்பதிவு செய்யும் இடங்கள் மற்றும் ஒரு பெரிய பார்வையாளர் மண்டபம் கொண்ட புதிய இட ஒதுக்கீடு மையம் போன்றவை 2013 இல் கட்டப்பட்டன.[3]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking – Session 2. CMDA, Chennai. பார்க்கப்பட்ட நாள் 19 August 2012.
  2. Madhavan, D. (16 March 2014). "'FOB at Beach station should be extended soon'". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/fob-at-beach-station-should-be-extended-soon/article5789827.ece. பார்த்த நாள்: 20 March 2014. 
  3. Madhavan, D. (11 February 2014). "New reservation centre awaits inauguration". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140419014130/http://www.thehindu.com/features/downtown/new-reservation-centre-awaits-inauguration/article5673357.ece. பார்த்த நாள்: 18 Apr 2014. 

வெளி இணைப்புகள் தொகு