மெரீனா கடற்கரை

(மெரினா கடற்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆள்கூறுகள்: 13°03′15″N 80°17′01″E / 13.05418°N 80.28368°E / 13.05418; 80.28368

மரீனா கடற்கரை [மெரீனா அல்லது மெரினா கடற்கரை] (Marina Beach) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது[1].

மரீனா கடற்கரை
Kamarajar Salai and Marina Beach.jpg
காமராஜர் சாலை நெடுகிலும் மெரீனா கடற்கரை.
இருப்பிடம்இந்தியா சென்னை, இந்தியா
கடற்கரைகோரமண்டல், வங்காள விரிகுடா
வகைநகர்ப்புற, மணல் கடற்கரை
உருவாக்கம்1884
மொத்த நீளம்13 km (8.1 mi)
உலாவும் சாலை நீளம்6 km (3.7 mi)
அதிகபட்ச அகலம்437 m (1,434 ft)
நோக்குநிலைவடக்கு-தெற்கு
குறிப்பிடத்தக்க அடையாளங்கள்கலங்கரை விளக்கம், அண்ணா நினைவகம், எம்.ஜி. ஆர் நினைவகம், நேப்பியர் பாலம்
நிர்வாக அதிகாரம்சென்னை மாநகராட்சி
1913 ஆம் ஆண்டில் கடற்கரையின் உலாவும் சாலை

வரலாறுதொகு

சென்னைத் துறைமுகம் கட்டப்படும் முன்பு, மெரினா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது.

மெரீனாவை காப்பாற்றதொகு

சுவாமி விவேகானந்தரின் சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் கிருஷ்ண சுவாமி அய்யர். இவர் 1890 களில் தென்னக ரயில்வே, மயிலாப்பூரையும், கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். 'இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல். இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறினார்'. மெரீனாவை காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினை கைவிட்டது.[2]

நிகழ்வுகள்தொகு

சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.

போக்குவரத்துதொகு

மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.

புகழ்பெற்றவர்கள்தொகு

ஈழத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க வந்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மெரீனா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் ஆடவர் விடுதியில் வசித்துள்ளார்.

எழில்மிகு காட்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.vikatan.com/news/tamilnadu/78988-no-more-protest-in-marina-beach-informs-police.art
  2. கிருஷ்ண சுவாமி அய்யர் என்ற மாமனிதர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனா_கடற்கரை&oldid=2818613" இருந்து மீள்விக்கப்பட்டது