சென்னை கலங்கரை விளக்கம்
சென்னை கலங்கரை விளக்கம் (Chennai Lighthouse) சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும்.
![]() சென்னை கலங்கரை விளக்கம் | |
அமைவிடம் | மெரீனா கடற்கரை |
---|---|
கட்டப்பட்டது | 1977 |
ஒளியூட்டப்பட்டது | 1977 |
அடித்தளம் | Reinforced concrete (Current location) |
கட்டுமானம் | RCC |
கோபுர வடிவம் | Triangular cylindrical with lantern and double gallery |
குறியீடுகள்/அமைப்பு | Horizontal red and white bands |
உயரம் | 45.72 மீட்டர்கள் (150.0 அடி) |
குவிய உயரம் | 57 மீட்டர்கள் (187 அடி) above MSL |
ஆரம்ப வில்லை | 375 mm 3rd order revolving optic inside 2.5 m dia lantern house (BBT) |
செறிவு | 110V 3000W Incandescent Lamp |
வீச்சு | 28 கடல் மைல்கள் (52 km; 32 mi) |
சிறப்பியல்புகள் | Two white flashes every 10 seconds |
Admiralty எண் | F 0936 |
NGA எண் | 27072 |
ARLHS எண் | IND-010[1] |
அகில இந்திய வானொலி நிலையத்தின் அலுவலகத்திற்கு எதிர்மாறாக காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. மெரினா கடற்கரையின் வடக்குப் பகுதியிலுள்ள பிரம்மாண்டத்தின் முடிவை விளக்குகிறது. காமராஜர் சாலை, சாந்தோம் உயர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பாகும்.10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 14, 2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
அமைப்பு தொகு
10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகம் தொகு
பிரமாண்டமான விளக்குடன்கூடிய புதிய அருங்காட்சியகம், கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அந்தக் காலத்தில் எப்படி இயக்கப்பட்டது? இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் எப்படி இயக்கப்படுகிறது? போன்றவற்றை விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் விளக்க உரையுடன் இடம்பெறுகிறது.[2]
வரலாறு தொகு
- 1796 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் முதல் கலங்கரை விளக்கம் பொருத்தப்பட்டது.
- 1844 ஆம் ஆண்டு பூக்கடை பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 161 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தனர்.
- 1894 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருந்த 175 அடி உயர கோபுரத்தில் விளக்கு அமைக்கப்பட்டது.
- 1977 ஆம் ஆண்டு மெரினாவில் 45 மீட்டர் உயரத்தில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி மெரினா கலங்கரை விளக்கத்தில் ஏறிப்பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.[3][4][5][6]
பார்வையிட அனுமதி தொகு
நவம்பர் 14, 2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.[7][8][9]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Chennai/Madras (New) Light". World List of Lights (WLOL) (Amateur Radio Lighthouse Society). http://wlol.arlhs.com/lighthouse/IND10.html. பார்த்த நாள்: 27-Nov-2011.
- ↑ தி இந்து
- ↑ 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அனுமதி தினதந்தி
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/soon-enjoy-view-from-chennais-oldest-lighthouse/article5138994.ece
- ↑ நவம்பர் 14 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது கலங்கரை விளக்கம் தினமணி
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/chennai-lighthouse-will-be-open-to-public-from-november-14/article5278759.ece
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/chennai-lighthouse-reopened-to-visitors/article5350627.ece
- ↑ சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திறப்பு பிபிசி
- ↑ தினமணி