நேப்பியர் பாலம்

நேப்பியர் பாலம் சென்னை மாநகரின் புனித ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைக்கும் பாலமாகும். இது கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.

நேப்பியர் பாலம்
போக்குவரத்து 6 வழி சாலை
தாண்டுவது கூவம் நதி
இடம் சென்னை , தமிழ்நாடு , இந்தியா
கட்டுமானப் பொருள் கான்கிரீட்
அதிகூடிய அகல்வு 138 m (452.8 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி கட்டப்பட்டது 1869, புதுப்பித்தல் 1999
அமைவு 13°04′08″N 80°17′04″E / 13.0688°N 80.2845°E / 13.0688; 80.2845

வரலாறு தொகு

சென்னை நகரின் மிகப் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் 1869 ஆம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்ற சென்னை ஆளுநராரால் கட்டப்பட்டது. நேப்பியர் பாலம் 1999ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் இதனை இரும்புப் பாலம் என்று அழைத்தனர். 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்தப் பாலம் கட்டப்பட்டது.[1]

புதுப்பித்தல் தொகு

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நேப்பியர் பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண விளக்கு ஒளியில் நேப்பியர் பாலம் நதியில் மிதப்பதைப் போன்று அமைக்கப்பட்டது. 16.2 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட ஒளிரூட்டும் பணி எல்.டி.பி என்ற ஆஸ்திரேலியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் 27 ஜூலை 2010 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.

2022 ஆம் ஆண்டு சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு சென்னையில் நடைபெற்றதால் அதற்கு முன்னதாக நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளை சதுரங்களைக் கொண்டதாக ஒரு சதுரங்கப் பலகையின் தோற்றத்தில் வர்ணம் பூசப்பட்டது.[2][3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேப்பியர்_பாலம்&oldid=3483525" இருந்து மீள்விக்கப்பட்டது