பேச்சு:சென்னை மெட்ரோ
கேள்வி
தொகுமெட்ரோ - தமிழில் என்ன?--ரவி 06:56, 31 ஜூலை 2009 (UTC)
- மெட்ரோ என்பது ஆங்கில மெட்ரோபாலிட்டன் என்னும் சொல்லில் இருந்து பெருநகர் சார்ந்த சேவைகளுக்கு ஒற்றுப்பெயராக வரும். மெட்ரோ சினிமா, மெட்ரோ நாளிதழ், மெட்ரோ FM, மெட்ரோ வணிகமையம் என ஆங்கிலத்தில் பலவாறான சொற்கள் புழங்கினாலும் பெரும்பான்மையாக பெருநகர் துரிதப்போக்குவரத்தைக் குறிக்கும்.
மெட்ரோ - CMDA தமிழில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் என அழைப்பதால் மெட்ரோ = பெருநகர்.
நீங்கள் பெருநகர் துரிதப்போக்குவரத்தைக் குறித்தால் பொது ஊடகங்களில் மெட்ரோ என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர் விரைவுத்தொடர் என குறிப்பிட எனது பரிந்துரை.--மணியன் 07:33, 31 ஜூலை 2009 (UTC)
சென்னை விரைநகர்வு கழகம் வரையறுக்கப்பட்டது = Chennai Metrorail Corporation Limited
விரைநகர்வு = Metro Rail
தனித்தடம் = Mono Rail
பேருந்து விரைப்போக்குவரத்து = Bus Rapid Transport
--தொழில்நுட்பம் 13:49, 10 சூன் 2011 (UTC)
CMRL கலைச்சொல் பரிந்துரைகள்
தொகு1. இவ் வலைப்பூவில்[1] metro rail என்பதற்குப் பெருநகர் இருவுளி என்ற சொல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது; எனவே, CMRLஐ சென்னைப் பெருநகர் இருவுளி நிறுவனம் எனலாம்.
2. * metro என்பது metropolitan என்பதால் பெருநகர் என்பது சரி (CMDA = சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்)
- rail என்பது அதில் இயங்கும் வண்டியைக் குறிப்பதாகக் கொண்டால், தொடர்வண்டி அல்லது தொடரி (கலைச்சொல் சிறியதாக, பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பது நல்லது) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மேலும், CMRL தங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்றே கூறிக்கொள்வதால், தொடரியின் விரைவுத் தன்மையைப் பற்றிய குறிப்பு சொல்லில் தேவையில்லை என்பது என் எண்ணம்.
- ஆக, CMRLஐ சென்னைப் பெருநகர் தொடரி நிறுவனம் எனலாம். --PARITHIMATHI (பேச்சு) 04:37, 24 அக்டோபர் 2023 (UTC)
மேற்கோள்கள்
தொகுதற்போதைய நிலை
தொகுமெட்ரோவில் முதல் தடம் நீல வழி என்றும் இரண்டாம் தடம் பச்சை வழி என்றும் குறியிடப்படுகிறது. மேலும் முதல் தடத்தை விம்கோ நகர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. யாரேனும் முடிந்தால் இத்தகவல்களை கட்டுரையில் இணைக்கவும். Aadhitharajan (பேச்சு) 16:42, 8 திசம்பர் 2016 (UTC)