சேத்துப்பட்டு தொடருந்து நிலையம்
சேத்துப்பட்டு தொடருந்து நிலையம் (Chetpet railway station, நிலையக் குறியீடு:MSC) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
சேத்துப்பட்டு | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
சேத்துப்பட்டு தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | எம்.சி.நிக்கோல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°4′27″N 80°14′35″E / 13.07417°N 80.24306°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் |
| ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MSC | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 15 நவம்பர் 1931 | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் சென்னையின் புறநகர்ப் பகுதியான சேத்துப்பட்டு நகரின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் அருகிலேயே சேத்துப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வரலாறு
தொகுஇந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)