வேப்பேரி (சென்னை)

இதே பெயரைக் கொண்டுள்ள ஊர்களைப் பற்றி அறிய, வேப்பேரி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

வேப்பேரி (Vepery ) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஒரு துணை நகரப்பகுதியாகும். சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் இந்நகர்ப்பகுதி உள்ளது. பூங்கா நகரத்தின் போக்குவரத்து மையமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையின் வடக்கே ஒரு செவ்வக பகுதியை உள்ளடக்கியுள்ளது.

வேப்பேரி
Vepery
துணைநகரம்
சுவேதாம்பர் செயின் ஆலயம்
சுவேதாம்பர் செயின் ஆலயம்
வேப்பேரி Vepery is located in சென்னை
வேப்பேரி Vepery
வேப்பேரி
Vepery
வேப்பேரி Vepery is located in தமிழ் நாடு
வேப்பேரி Vepery
வேப்பேரி
Vepery
வேப்பேரி Vepery is located in இந்தியா
வேப்பேரி Vepery
வேப்பேரி
Vepery
ஆள்கூறுகள்: 13°5′1″N 80°15′52″E / 13.08361°N 80.26444°E / 13.08361; 80.26444
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மெட்ரோசென்னை
தாலுக்காதண்டையார்பேட்டை கோட்டை
அரசு
 • நிர்வாகம்சென்னை மாநகரம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
600 007
நாடாளுமன்ற தொகுதிவட சென்னை
Planning agencyCMDA
Civic agencyChennai Corporation
இணையதளம்www.chennai.tn.nic.in

வரலாறு

தொகு

மெட்ராசு நகரில் பிரித்தானியக் குடியேற்றத்தின் போது உருவாக்கப்பட்ட பழமையான குடியிருப்புச் சுற்றுப்புறங்களில் வேப்பேரியும் ஒன்றாகும். 1749 ஆம் ஆண்டிலேயே கிறித்துவ மதபோதகர்கள் இப்பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். ஐக்சு லா சேப்பல் உடன்படிக்கைக்குப் பின்னர், இந்நகரம் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்களுக்கு மீட்டெடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமான இங்கிலாந்து திருச்சபையுடன் இணைக்கப்பட்ட மிகப் பழமையான ஓர் அமைப்பு வேப்பேரியில் அமைந்திருந்த நிறுவன அமைப்பாகும் [1].. 1828 ஆம் ஆண்டில் புனித மத்தியாசு தேவாலயம் கட்டப்பட்டது. இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையான புனித சியார்ச்சு கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்குப் பிறகு இரண்டாவது பழமையான ஆங்கிலிக்க தேவாலயமாக அமைந்தது. 1842 ஆம் ஆண்டில் புனித மத்தியாசு நாளில் இந்த தேவாலயம் மெட்ராசு நகரின் கிருத்துவப் பாதிரி சிபென்சரால் அதிகாரப்பூர்வமாக புனிதப்படுத்தப்பட்டது.

மார்ச் 1, 1855 அன்று, மெட்ராசு பெற்றோர் கல்வி நிறுவனம் மற்றும் டோவெட்டன் கல்லூரி ஆகியவை அப்போதைய மெட்ராசு நகரத்தின் உள்ளூர் எல்லைக்குள் வேப்பரியில் நிறுவப்பட்டன. ஏழாவது படைப்பிரிவு காலாட்படையில் படைப்பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய இராணுவ வீர்ர் யான் டோவெட்டனின் பெயரை டோவெட்டனைச் சுற்றியுள்ள பகுதிகள் பெற்றன[2].

அடையாளங்கள்

தொகு

இப்பகுதியிலுள்ள முக்கியமான சில இடங்கள் வருமாறு:

  • பெரியார் திடல்
  • காவல் துறை ஆணையர் அலுவலகம்[3]
  • விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சமூக அலுவலகம்.
  • டோவேட்டன் மணிக்கூண்டு

கல்வி நிறுவனங்கள்

தொகு

கல்லூரிகள்

தொகு
  • சென்னை கால்நடையியல் கல்லுரி
  • பி.டி.லீ செங்கல்வராய பல்தொல்நுட்பக் கல்லூரி
  • புனித கிருத்தோபர் கல்வியியல் கல்லூரி
  • குரு சிறீ சாந்திவிச்சய் செயின் மகளிர் கல்லூரி

தெருக்கள்

தொகு

வேப்பேரியிலுள்ள முக்கியத் தெருக்கள் •வேப்பேரி உயர் சாலை •யெர்மியா சாலை •பராக்சு சாலை •ஈ.வி.கே. சம்பத் சாலை •மேடாக்சு சாலை •பிரெத்தபீட்டு சாலை

இரயில் நிலையங்கள்

தொகு

சென்னை எழும்பூர் இரயில் நிலையம். சென்னை பூங்கா இரயில் நிலையம் போன்ற இரயில் நிலையங்கள் வேப்பேரிக்கு அருகில் உள்ளன.

பேருந்துகள்

தொகு

வேப்பேரியிலிருந்து சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. டோவேட்டன் பேருந்து நிலையம், வடக்கு எழும்பூர் இரயில் நிலையப் பேருந்து நிலையம், மில்லர்சு பேருந்து நிலையம், எழும்பூர் பேருந்து நிலையம் ஆகியவை வேப்பேரிக்கு அருகிலுள்ள பேருந்து நிலையங்களாகும். 10ஏ, 134ஏ, 159சி, 159இ, 17 போன்றவை இங்கிருந்து புறப்படும் சில முக்கியத் தடங்களில் செல்லும் பேருந்துகள் ஆகும்.

வேப்பேரியில் கடந்த 11 அக்டோபர் 2013 அன்று, ஈ.வி.கே சம்பத் சாலையில் 2009 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடித்த புதிய காவல் ஆணையர் அலுவலகம் அப்போதைய முதல் அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பத்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Westcott, A. (1897). "Our Oldest Indian Mission: A Brief History of the Vepery (Madras) Mission". Madras Diocesan Committee of the Society for Promoting Christian Knowledge. பார்க்கப்பட்ட நாள் 1 Sep 2013.
  2. "Our History". Doveton Corrie Protestant Schools Association. Archived from the original on 28 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 1 Sep 2013.
  3. Selvaraj, A. (16 July 2011). "CM to open police head office in Vepery". The Times of India (Chennai: The Times Group) இம் மூலத்தில் இருந்து 1 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130901092950/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-16/chennai/29780981_1_construction-material-city-police-nadu-police-housing-corporation. பார்த்த நாள்: 1 Sep 2013. 
  4. சென்னையில் புதிய காவலர் ஆணையம் அலுவலகம், பக்கம் 2, வெளியீடு நாள்:12-10-2013, புதிய தலைமுறை நாளேடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பேரி_(சென்னை)&oldid=3572613" இலிருந்து மீள்விக்கப்பட்டது