பெரியார் திடல்

பெரியார் திடல் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின், எழும்பூர் அருகே வேப்பேரி பகுதியில் உள்ளது. பெரியார் திடலில் ஈ. வெ. இராமசாமியின் நினைவிடம்[1], பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், கூட்டத் திடல், பெரியார்-மணியம்மை மருத்துவமனை[2], கூட்ட அரங்கம், பெரியார் அருங்காட்சியகம், நூல் விற்பனை நிலையம்[3] மற்றும் இந்தியக் குடிமைப் பணிகள் பயிற்சி மையம்[4] ஆகியவை அமைந்துள்ளது. இத்திடலைப் பரமாரிப்பது திராவிடர் கழகம் ஆகும்.

நூலகம்

தொகு

இங்கு பெரியார் பகுத்தறிவு நூலகம், ஆய்வகம் என்ற பெயரிலான நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில் பகுத்தறிவு, பெண்ணியம், அரசியல் எனப் பல்வேறு வகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இது அமைந்துள்ளது. இந்நூலகம் காலை 9.30 முதல் மாலை 6 மணிவரை செயல்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.vikatan.com/news/miscellaneous/11757-
  2. https://www.viduthalai.page/2021/05/19_29.html
  3. https://www.indiainfo.net/place/periyar-book-house-1307663
  4. https://kalvimalar.dinamalar.com/news-details.asp?id=37&cat=5
  5. "சென்னையின் அறிவுச் சுரங்கங்கள்!". 2023-08-22. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியார்_திடல்&oldid=3863207" இலிருந்து மீள்விக்கப்பட்டது