இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation) (இந்தி: नागर विमानन मंत्रालय, naagar vimaanan mantraalay) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய மூத்த அமைச்சராக ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா மற்றும் இணை அமைச்சராக விஜய் குமார் சிங் உள்ளனர்.
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | இராஜீவ் காந்தி பவன், புது தில்லி |
ஆண்டு நிதி | ₹6,602.86 (US$83) (2018–19 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
வலைத்தளம் | www |
பணிகள் தொகு
இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கான தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்கு பொறுப்பான மத்திய அமைச்சகம் ஆகும். இது நாட்டில் சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்கான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. வான் பாதுகாப்பு, விமான நிலைய வசதிகள், விமான போக்குவரத்து சேவைகள் மற்றும் பயணிகள் மற்றும் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்வதை மேற்பார்வையிடுவது இந்த அமைச்சகத்தின் பணியாகும்.
இந்த அமைச்சகத்தின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் செயல்படுகிறது.[2] மேலும் இந்த அமைச்சகத்தின் கீழ் விமான நிலையங்களின் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.[3]
அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் தொகு
- விமானப் போக்குவரத்து பாதுகாப்பு செயலகம்
- விமான விபத்து விசாரணை செயலகம்
பயிற்சி நிறுவனங்கள் தொகு
- இந்திராகாந்தி தேசிய விமானப் பயிற்சி நிறுவனம்[4]
சட்டப்பூர்வ அமைப்புகள் தொகு
பொதுத்துறை நிறுவனங்கள் தொகு
- பவன்ஸ் ஹன்ஸ், சிறிய விமானங்கள் & உலங்கு வானூர்திகள்
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Budget data". 2019 இம் மூலத்தில் இருந்து 4 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304170727/http://www.indiabudget.gov.in/ub2018-19/eb/sbe95.pdf.
- ↑ Directorate General of Civil Aviation (India)
- ↑ Economic Regulatory Authority (AERA)]
- ↑ Indira Gandhi Rashtriya Uran Akademi