ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா

1971 இல் பிறந்த இந்திய அரசியல்வாதி

ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா (Jyotiraditya Madhavrao Scindia, பிறப்பு 1 சனவரி 1971) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆவார். இவர் , ஒரு காலத்தில் குவாலியரை ஆட்சிசெய்த சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர் மத்தியப் பிரதேசத்தின் குணா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இதற்கு முன் , இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

ஜோதிர் ஆதித்யா சிந்தியா
Jyotiraditya Scindia
இந்திய அரசின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
07 சூலை 2021
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
பிரதமர் நரேந்திர மோடி
முன்னவர் ஹர்தீப் சிங் பூரி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 சூலை 2020
முன்னவர் சத்யநாராயணன் ஜாதியா
தொகுதி மத்திய பிரதேசம்
குணா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
24 பிப்ரவரி 2002 – 23 மே 2019
முன்னவர் மாதவராவ் சிந்தியா
பின்வந்தவர் மரு.கே.பி.யாதவ்
மின்சாரத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
பதவியில்
28 அக்டோபர் 2012 – 25 மே 2014
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் வீரப்ப மொய்லி
பின்வந்தவர் பியூஷ் கோயல்
கௌரவ குவாலியர் மகாராஜா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2001
முன்னவர் மாதவராவ் சிந்தியா
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1971 (1971-01-01) (அகவை 52)
மும்பை,மகாராஷ்டிரா, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிரியதர்சிணி ராஜே சிந்தியா (1994இல் மணந்தார்)
உறவினர் வசுந்தரா ராஜே சிந்தியா
யசோதரா ராஜே சிந்தியா
விஜயா ராஜே சிந்தியா
மேலும் காண்க - சிந்தியா வம்சம்
பிள்ளைகள் 2
பெற்றோர் மாதவராவ் சிந்தியா (தந்தை)
மாதவிராவ் சிந்தியா (தாய்)
இருப்பிடம் செய் விலாசு மகால், குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா
புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் டூன் பள்ளி
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்
இணையம் jyotiradityamscindia.com

இவர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் , மின்சாரத் துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக 2012 அக்டோபர் முதல் 2014வரை இருந்தார். மேலும் இவர் குவாலியரின் கௌவ அரசர் பட்டதுடன் இருக்கிறார். அதாவது குவாலியர் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அவர் அதன் அரசராக இருந்திருப்பார்.[1][2]

ஆரம்ப வாழ்கை தொகு

மராத்தா குடும்பத்தில் 1971 சனவரி முதல் நாளன்று பம்பாயில் சிந்தியா பிறந்தார்.[3] இவரது பெற்றோர் மாதவராவ் சிந்தியா மற்றும் மாதவி ராஜே சிந்தியா ஆவர். இவர் மாநகரின் காம்பியன் பள்ளியிலும் தேராதூனின் டூன் பள்ளியிலும் படித்தார்.[4] ப1993இல் இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றார். 2001இல், இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பயின்று பட்டம் பெற்றார்.[5][6]

1947இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட சமஸ்தானமான குவாலியரின் கடைசி மகாராஜாவாக இருந்த ஜிவாஜிராவ் சிந்தியா. இவருக்கு, சுதந்திர இந்தியாவில் மற்ற இளவரசர்களைப் போலவே பட்டம் மற்றும் சலுகைகள், ஆண்டு மானியம் போன்றவை வழங்கப்பட்டன. 1961இல் இவரது மரணத்துக்குப் பிறகு இவரது மகனான மாதவ்ராவ் சிந்தியா (ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவின் தந்தை) குவாலியர் மகாராஜா என்ற பட்டத்தைப் பெற்றார். 1971 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 26 வது திருத்தத்தின்படி,[7] இந்தியாவின் முன்னாள் மன்னர்களின் பட்டங்கள் மானியங்கள் போன்றவை ஒழிக்கப்பட்டன.[8]

ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா வடோதராவின் கெய்க்வாட் குடும்பத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி ராஜே சிந்தியாவை மணந்தார்.

அரசியல் வாழ்வு தொகு

இந்திய காங்கிரசு கட்சி (2001-2020) தொகு

இவருது தந்தை மாதவ ராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு 2002 பெப்ரவரியில் குணா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] இவர் 2004 இல் மீண்டும் இத்தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்,[9] பின்னர் 2007இல் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், 2009இல் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார். 2012இல் மின்சாரத் துறைக்கு தனிப்பொறுப்பு வகித்து இணையமைச்சரானார்.[9]

2014 ஆம் ஆண்டில், குணா தொகுதியில் இருந்து சிந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த இடத்தை கிருஷ்ண பால் சிங் யாதவிடம் 2019 இல் இழந்தார்.[10]

பாரதிய ஜனதா கட்சி (2020-தற்போது வரை) தொகு

இந்திய தேசிய காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பியதன் மூலம் இவர் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகினார்.[11] 2020 மார்ச் 9 தேதியிட்ட ராஜினாமா கடிதம் மார்ச் 10 அன்று பகிரப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் இவரை "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக" நீக்கப்படுவதாக கூறப்பட்டது. இவர் 2020 மார்ச் 11, 2020 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[12]. இவரைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவாக இருந்த காங்கிரசு கட்சியின் மத்திய பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் , தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜ.க - வில் இணைந்ததால்[13] ,மத்திய பிரதேசத்தின் அப்போதைய காங்கிரசு முதல்வர் கமல் நாத் பெரும்பான்மையை இழந்தார்[14]. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஜூன் 2020 அன்று , இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[15].

07 சூலை 2021 அன்று , இந்திய அரசின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்[16].

மேற்கோள்கள் தொகு

 1. [1] பரணிடப்பட்டது 31 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
 2. "Ministry of Power". Powermin.nic.in இம் மூலத்தில் இருந்து 2013-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130715093330/http://powermin.nic.in/. பார்த்த நாள்: 2013-07-18. 
 3. The Indian Princes and their States. Cambridge University Press. https://books.google.com/books?id=Kz1-mtazYqEC&pg=PA35. 
 4. "The evolution of Honorable Shri. Jyotiraditya Scindia". Times of India. http://timesofindia.indiatimes.com/delhi-times/the-evolution-of-jyotiraditya-scindia/articleshow/11710390.cms. பார்த்த நாள்: 2009-06-21. 
 5. "Honorable Shri. Jyotiraditya Madhavrao Scindia - Minister of State for Commerce & Industry". Department of Commerce, Government of India இம் மூலத்தில் இருந்து 21 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721163607/http://www.commerce.nic.in/bio/stateminister.asp. பார்த்த நாள்: 2011-03-08. 
 6. "Jyotiraditya M. Scindia - Minister of State for Commerce & Industry". Department of Industrial Policy & Promotion, Government of India இம் மூலத்தில் இருந்து 22 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110322024448/http://www.dipp.nic.in/CV_MOS.htm. பார்த்த நாள்: 2011-03-08. 
 7. "The Constitution (26 Amendment) Act, 1971", indiacode.nic.in, Government of India, 1971, retrieved 9 November 2011
 8. 1. . , "Through a constitutional amendment passed in 1971, Indira Gandhi stripped the princes of the titles, privy purses and regal privileges which her father's government had granted." (p 278). 2. Naipaul, V. S. (8 April 2003), India: A Wounded Civilization, Random House Digital, Inc., pp. 37–, ISBN 978-1-4000-3075-0, retrieved 6 November 2011 Quote: "The princes of India – their number and variety reflecting to a large extent the chaos that had come to the country with the break up of the Mughal empire – had lost real power in the British time. Through generations of idle servitude they had grown to specialize only in style. A bogus, extinguishable glamour: in 1947, with Independence, they had lost their state, and Mrs. Gandhi in 1971 had, without much public outcry, abolished their privy purses and titles." (pp 37–38). 3. Schmidt, Karl J. (1995), An atlas and survey of South Asian history, M.E. Sharpe, p. 78, ISBN 978-1-56324-334-9, retrieved 6 November 2011 Quote: "Although the Indian states were alternately requested or forced into union with either India or Pakistan, the real death of princely India came when the Twenty-sixth Amendment Act (1971) abolished the princes' titles, privileges, and privy purses." (page 78). 4. Breckenridge, Carol Appadurai (1995), Consuming modernity: public culture in a South Asian world, U of Minnesota Press, pp. 84–, ISBN 978-0-8166-2306-8, retrieved 6 November 2011 Quote: "The third stage in the political evolution of the princes from rulers to citizens occurred in 1971, when the constitution ceased to recognize them as princes and their privy purses, titles, and special privileges were abolished." (page 84). 5. Guha, Ramachandra (5 August 2008), India After Gandhi: The History of the World's Largest Democracy, HarperCollins, pp. 441–, ISBN 978-0-06-095858-9, retrieved 6 November 2011 Quote: "Her success at the polls emboldened Mrs. Gandhi to act decisively against the princes. Through 1971, the two sides tried and failed to find a settlement. The princes were willing to forgo their privy purses, but hoped at least to save their titles. But with her overwhelming majority in Parliament, the prime minister had no need to compromise. On 2 December she introduced a bill to amend the constitution and abolish all princely privileges. It was passed in the Lok Sabha by 381 votes to six, and in the Rajya Sabha by 167 votes to seven. In her own speech, the prime minister invited 'the princes to join the elite of the modern age, the elite which earns respect by its talent, energy and contribution to human progress, all of which can only be done when we work together as equals without regarding anybody as of special status.' " (page 441). 6. .  Quote: "The Indian princes survived the British Raj by only a few years. The Indian republic stripped them of their powers and then their titles." (page 10). 7. Merriam-Webster, Inc (1997), Merriam-Webster's geographical dictionary, Merriam-Webster, pp. 520–, ISBN 978-0-87779-546-9, retrieved 6 November 2011 Quote: "Indian States: "Various (formerly) semi-independent areas in India ruled by native princes .... Under British rule ... administered by residents assisted by political agents. Titles and remaining privileges of princes abolished by Indian government 1971." (page 520). 8. Ward, Philip (September 1989), Northern India, Rajasthan, Agra, Delhi: a travel guide, Pelican Publishing, pp. 91–, ISBN 978-0-88289-753-0, retrieved 6 November 2011 Quote: "A monarchy is only as good as the reigning monarch: thus it is with the princely states. Once they seemed immutable, invincible. In 1971 they were "derecognized," their privileges, privy purses and titles all abolished at a stroke" (page 91)
 9. 9.0 9.1 9.2 செல்வ புவியரசன் (18 திசம்பர் 2018). "ராகுலின் இரண்டு தளபதிகள்". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/opinion/columns/article25769526.ece. பார்த்த நாள்: 19 திசம்பர் 2018. 
 10. "Guna Election Results 2019 Live Updates: Krishna Pal Singh of BJP Wins". News18. 23 May 2019. https://www.news18.com/news/politics/guna-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2154581.html. பார்த்த நாள்: 2019-09-14. 
 11. Deepak Upadhyay (10 March 2020). "Jyotiraditya Scindia resigns from congress". Live Mint. https://www.livemint.com/news/india/mp-political-crisis-jyotiraditya-scindia-meets-pm-narendra-modi-amit-shah-11583822170775.html. 
 12. "Stung by Scindia resignation congress claims it expelled guna royal for anti party activities". News18. 10 March 2020. https://www.news18.com/news/politics/stung-by-scindias-resignation-congress-claims-it-expelled-guna-royal-for-anti-party-activities-2532049.html. 
 13. "22 rebel Cong MLAs, whose resignation led to fall of Kamal Nath govt, join BJP" (in en). 2020-03-21. https://www.livemint.com/politics/news/22-rebel-cong-mlas-whose-resignation-led-to-fall-of-kamal-nath-govt-join-bjp-11584797981690.html. 
 14. "Shivraj takes oath as MP CM For 4th time". https://www.msn.com/en-in/news/politics/madhya-pradesh-shivraj-singh-chouhan-takes-oath-as-cm-for-fourth-term/ar-BB11AdlM. 
 15. "Jyothiradithya scindia elected as RS MP". https://www.thehindu.com/news/national/rajya-sabha-elections-2020-results/article31871383.ece. 
 16. DelhiJuly 7, India Today Web Desk New; July 7, 2021UPDATED:; Ist, 2021 21:38. "Modi cabinet rejig: Full list of new ministers" (in en). https://www.indiatoday.in/india/story/modi-cabinet-rejig-full-list-of-new-ministers-1825111-2021-07-07.