தொடருந்துகள் மோதல் எதிர்ப்புக் கருவி

தொடருந்துகள் மோதல் எதிர்ப்பு சாதனம் என்பது இந்திய இரயில்வேயில் பயன்படுத்தப்படும் தானியங்கி தொடருந்து பாதுகாப்பின் ஒரு வடிவமாகும்.[1]

கண்ணோட்டம்

தொகு

தொடருந்துகள் மோதல் எதிர்ப்பு தானியங்கி கருவியை ராஜாராம் போஜ்ஜியால் கண்டுபிடிக்கப்பட்ட தொடருந்துகள் மோதல் தடுப்பு அமைப்பாகும். இது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம்த்தின் பொதுத் துறை நிறுவனமான கொங்கண் ரயில்வே நிறுவனத்தின் காப்புரிமை பெற்றது. தொடருந்துகள் மோதல் எதிர்ப்புக் கருவியை பல கட்ட ப்ரிசோதனைகளுக்குப் பிறகு பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.[2]

இருப்புப்பாதை சந்திக்கடவுகள்

தொகு

தொடருந்துகள் ஆளில்லா சந்திக்கடவுகளை கடப்பதற்கு முன்னர் தொடருந்துகளின் வேகத்தை மணிக்கு 30 கிலோ மீட்டர் ஆக கட்டுப்படுத்துகிறது. மனிதர்கள் இயக்கும் சந்திக்கடவுகளில் மற்றும் ஆளில்லா சந்திக்கடவுகளில் தொடருந்துகள் வரும் செய்தியை எச்சரிக்கிறது.

ஒரு தொடருந்தின் மோதல் எதிர்ப்பு கருவியிலிருந்து அனுப்பப்படும் எச்சரிக்கை சமிக்ஞை மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களுக்குச் சென்றடைவதுடன், தொடருந்துகளை தானாவே நிறுத்துவதற்கு நெருக்கடித்-தடையன்களை பயன்படுத்துகிறது.

இந்த மோதல் எதிர்ப்பு சாதனத்தின் பயன்பாடு நடுப்பகுதி மோதல்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், தொடருந்து நிலையத்தின் சரக்கு முற்றங்களில் மோதல்கள் நிகழ்வதைத் தடுக்கவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட இக்கருவி சமிக்கை அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையத்திலிருந்து, மற்றொரு நிலையத்திற்கு இரயில்கள் நெருங்கும் போது, மோதல் போன்ற நிலைமைகள் உணரப்பட்டால், தகுந்த முறையில் வினைபுரியும் வகையில் இக்கருவிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலம்

தொகு

இந்திய இரயில்வே தனது பரந்த பாதையில் 1,736 கிலோ மீட்டர் (1,079 மைல்) தொலைவை உள்ளடக்கிய வடகிழக்கு எல்லை இரயில் பாதையில் வெற்றிகரமாக தொடருந்துகள் மோதல் எதிர்ப்பு சாதனத்தைச் சோதனை செய்துள்ளது. தற்போது கொங்கண் இருப்புப்பாதையில் 760 கிலோ மீட்டர் (470 மைல்) தொலைவிற்கு தொடருந்துகள் மோதல் எதிர்ப்பு சாதனத்தை நிறுவப்பட்டுள்ளது.

புதிய மோதல் எதிர்ப்பு சாதனத்தின் இரண்டாம் பதிப்பு-II, தற்போது தொடருந்து மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) என அழைக்கப்படுகிறது. இது ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பால் (RDSO) உருவாக்கப்படுகிறது. மோதல் எதிர்ப்பு சாதனம் போலல்லாமல், இது தானியங்காகச் செயல்படும் ஒரு விநியோகிக்கப்பட்ட அமைப்பாகும். புதிய மோதல் எதிர்ப்பு சாதனத்தின் இரண்டாம் பதிப்பு-II இரயில்களுக்கு இடையேயான தொடர்பைக் கட்டுப்படுத்தும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கும். இது இரயில்வே சமிக்கை அமைப்புகளுடன் ஆழமான இணைப்பைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Railways to introduce world’s most advanced early warning system
  2. "Anti-Collision Device (ACD) Network: A Train Collision Prevention System (TCPS)" (PDF). IndianRailways.gov.in. Konkan Railway Corporation. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.