பன்சிலால்

இந்திய அரசியல்வாதி

பன்சிலால் லெகா (Bansi Lal Legha) (26 ஆகஸ்ட் 1927 - 28 மார்ச் 2006) ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், மூத்த காங்கிரசுத் தலைவரும், அரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரியும் ஆவார். இவர், நவீன அரியானாவின் கட்டிடக் கலைஞராக பலராலும் கருதப்பட்டார்.[1] பன்சி லால் அரியானாவின் புகழ்பெற்ற லால் என்ற பெயரைக்கொண்ட மூவரின் ஒரு பகுதியாக இருந்தார். அதில் அரியானாவின் முக்கிய அரசியல் குடும்பங்களை உருவாக்க்கிய தேவிலால் , பஜன்லால் ஆகியோர் அடங்குவர். [2]

பன்சிலால் லெகா
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
21 திசம்பர் 1975 – 24 மார்ச் 1977
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்இந்திரா காந்தி
பின்னவர்ஜெகசீவன்ராம்
இரயில்வே துறை அமைச்சர்
பதவியில்
31 திசம்பர் 1984 – 4 சூன் 1986
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்ஏ. பி. ஏ. கனி கான் சௌத்ரி
பின்னவர்மோஷினா கித்வாய்
3வது அரியானாவின் முதலமைச்சர்
பதவியில்
22 மே 1968 – 30 நவம்பர் 1975
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்பனாரசி தாஸ் குப்தா
பதவியில்
5 சூலை 1986 – 19 சூன் 1987
முன்னையவர்பஜன்லால்
பின்னவர்தேவிலால்
பதவியில்
11 மே 1996 – 23 சூலை 1999
முன்னையவர்பஜன்லால்
பின்னவர்ஓம்பிரகாஷ் சௌதாலா
[[ இந்தியா நாடாளுமன்றம்]]
பிவானி மக்களைத் தொகுதி
பதவியில்
1980–1987
முன்னையவர்சந்திராவதி
பின்னவர்சௌத்ரி ராம் நாராயண் சிங்
பதவியில்
1989–1991
முன்னையவர்சௌத்ரி ராம் நாராயண் சிங்
பின்னவர்ஜங்பீர் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஆகஸ்ட் 1927
கோலாகர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 March 2006 (2006-03-29) (அகவை 78)
புது தில்லி, இந்தியா

சட்டமன்றம்

தொகு

பன்சிலால் அரியானா மாநில சட்டமன்றத்திற்கு ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967இல் தோசாம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக வெற்றி பெற்றார். அரியானாவின் முதல்வராக மூன்று முறை பணியாற்றினார் (1968-75, 1986-87, , 1996-99. 1975 -1977). அவசர காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் அவரது மகன் சஞ்சய் காந்திக்கும் நெருங்கிய நம்பிக்கையாளராக இவர் கருதப்பட்டார்.[3]

பாராளுமன்றம்

தொகு

இவர் திசம்பர் 1975 முதல் மார்ச் 1977 வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். மேலும் 1975 இல் மத்திய அரசில் துறை இல்லாத அமைச்சராக சிலகாலம் பணியாற்றினார். இரயில்வே மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளையும் வகித்தார்.

இவர் 1996 இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த பின்னர் அரியானா விகாஸ் கட்சியை அமைத்தார். 2004இல் காங்கிரசுக்கு மீண்டும் திரும்பிய இவர், 2005 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறு ஆட்சியமைக்க காங்கிரசுக்கு உதவினார். [4]

இறப்பு

தொகு

பன்சிலால் புது தில்லியில் மார்ச் 28, 2006 அன்று தனது 79 வயதில் இறந்தார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bansi Lal dead".
  2. "Bansi Lal RIP".
  3. "Bansi Lal RIP".
  4. "Bansi Lal RIP".
  5. "Former Haryana CM Bansi Lal dead".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சிலால்&oldid=3188731" இலிருந்து மீள்விக்கப்பட்டது