முதன்மை பட்டியைத் திறக்கவும்

பஜன்லால் (Bhajan Lal, இந்தி: भजन लाल) (6 அக்டோபர் 1930 – 3 சூன் 2011) ஓர் இந்திய அரசியல்வாதியும் அரியானா மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார்.

பஜன்லால்
முன்னாள் அரியானா முதலமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 6, 1930(1930-10-06)
அரியானா
இறப்பு 3 சூன் 2011(2011-06-03) (அகவை 80)
அரசியல் கட்சி அரியானா ஜாங்கிட் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஜசுமா தேவி
பிள்ளைகள் சந்தர் மோகன் பிஷ்னோய், குல்தீப் பிஷ்னோய்
இருப்பிடம் சண்டிகர்

இளமை வாழ்வுதொகு

பஜன்லால் பாக்கித்தானிலுள்ள பஞ்சாபில் பகவல்பூர் மாவட்டத்தில் கோரண்வாலி சிற்றூரில் அக்டோபர் 6, 1930 அன்று பிஷ்னோய் சாதியில் பிறந்தார். தனது அரசியல் வாழ்வை ஆதம்பூர் கிராமப் பஞ்சாயத்தில் "பாஞ்ச்"(உறுப்பினர்) ஆக ஆனது மூலம் துவங்கினார். பின்னர் கிராம பஞ்சாயத்தின் சர்பாஞ்ச் (தலைவர்) ஆகப் பணியாற்றினார்.

இவருக்கு ஜசுமா தேவி என்ற மனைவியும் சந்தர் மோகன், குல்தீப் என இரு மகன்களும் உள்ளனர்.

அரசியல் வாழ்வுதொகு

செல்வாக்கு மிக்க ஜாட்கள் நிறைந்த அரியானா அரசியலில் ஜாட் அல்லாத தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகிய பஜன்லால் பல சாதனைகளை நிகழ்த்தினார். அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக முதல்முறை சூன் 28,1979 முதல் சூலை 5, 1985 வரையும் இரண்டாம் முறையாக சூலை 23, 1991 முதல் மே 11, 1996 வரையும் விளங்கினார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நடுவண் வேளாண் அமைச்சராகவும். சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சராகவும் பணியாற்றி யுள்ளார். அனைத்துத் தரப்பினரும் விரும்பிய மக்கள்தலைவராக விளங்கினார்.

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் அரியானா தலைவராக விளங்கிய பஜன் லாலின் ஆதிக்கம் 1996ஆம் ஆண்டு காங்கிரசு தழுவிய தோல்விக்குப் பிறகு சரியத் தொடங்கியது. 2005ஆம் ஆண்டு காங்கிரசு பெற்ற வெற்றியின்போது ஜாட் தலைவரான பூபேந்தர் சிங் ஹூடா முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதனை அடுத்து 2007ஆம் ஆண்டு தாம் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சியை, அரியானா ஜாங்கிட் காங்கிரசு, துவக்குவதாக அறிவித்தார். இதற்கான தூண்டுதலாக அவரது மகன், குல்தீப் பிஷ்னோயை ஒழுக்க நடவடிக்கையாக காங்கிரசு கட்சிநீக்கம் செய்தது அமைந்தது. இவரது புதிய கட்சியில் சந்தர்மோகன், குல்தீப் என்ற இரு மகன்களும் இணைந்தனர்.[2]

2009 மக்களவைத் தேர்தல்கள்தொகு

பஜன் லால் இசார் மக்களவைத் தொகுதியிலிருந்து மிகப் பெரும் வெற்றி பெற்றார். இந்திய தேசிய லோகதளக் கட்சியின் வேட்பாளர் சம்பத்சிங் தமது தோல்வியையடுத்து 32 ஆண்டுகள் பணியாற்றிய தமது கட்சியிலிருந்து விலகினார்.

இறப்புதொகு

பஜன்லால் சூன் 3, 2011 அன்று மாரடைப்பு நோயால் காலமானார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜன்லால்&oldid=2339526" இருந்து மீள்விக்கப்பட்டது