சமதா கட்சி

இந்திய அரசியல் கட்சி

சமதா கட்சி என்பது இந்திய அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். 1994 ஆம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் இக்கட்சியைத் தொடங்கினர். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பெற்றனர். 2003 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சமதா கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்தார். ஆனால், பிரமானந்த மண்டல் தலைமையிலான இக்கட்சியின் ஒரு குழுவினர் இந்த இணைப்பை ஏற்க மறுத்தனர். அவர்கள் சமதா கட்சி எனும் பெயரில் செயல்படத் தொடங்கினர்.[1] 2007 ஆம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர்.[2] சமதா கட்சி எனும் பெயரில் பல்வேறு குழுக்கள் தங்களுக்கென்று தனித் தலைமையைக் கொண்டு இயங்கி வருகின்றன. பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியினை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.[3] இக்கட்சியின் சின்னமாக எரியும் தீப்பந்தம் உள்ளது.

சமதா கட்சி
தலைவர்Uday Mandal
தொடக்கம்ஜார்ஜ் பெர்னான்டஸ், 1994
கொள்கைசமதர்மம்
இணையதளம்
https://www.samataparty.org/
இந்தியா அரசியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியின் இணையதளம்". Archived from the original on 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.
  2. "Times of India". Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "இந்து நாளிதழ் செய்தி". Archived from the original on 2014-04-04. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமதா_கட்சி&oldid=3583875" இலிருந்து மீள்விக்கப்பட்டது