சுவ்ரா முகர்ஜி

சுவ்ரா முகர்ஜி (Suvra Mukherjee, 17 அக்டோபர் 1940 - 18 ஆகத்து 2015) இந்திய எழுத்தாளரும், ஓவியரும், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியும் ஆவார். இதனால் இவர் இந்தியாவின் முதல் சீமாட்டி ஆவார்.

சுவ்ரா முகர்ஜி
பிறப்புசுவ்ரா கோஷ்
இறப்புஆகத்து 18, 2015(2015-08-18) (அகவை 74)
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், ஓவியர், பாடகர்
வாழ்க்கைத்
துணை
பிரணப் முகர்ஜி
பிள்ளைகள்மகன்கள் (அபிஜித்,
இந்திரஜித்) மகள் (சர்மிஷ்டா)

பிறப்பும், வாழ்க்கையும்

தொகு

சுவரா முகர்ஜி தற்போதய வங்கதேசத்தின், ஜெஸ்சார் என்ற பகுதியில் 1940 இல் பிறந்தார். அவருக்கு பத்து வயதாக இருந்தபோது அவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. 1957 சூலை, 13இல் பிரணப் முகர்ஜிக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது.[1] இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித், இரு மகன்களும், சர்மிஷ்டா என்ற மகளும் உள்ளனர். அபிஜித் மேற்கு வங்காளம், ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியின் இந்திய தேசிய காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

பணிகள்

தொகு

இரவீந்திரநாத் தாகூரின் இரசிகையான சுவ்ரா ஒரு பாடகியாக செயற்பட்டார்.[2] கீதாஞ்சலி ட்ரூப் என்ற பெயரில் தாகூரின் பாடல்களையும், கவிதைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அரங்கேற்றினார். ஒரு ஓவியராக சிலருடன் சேர்ந்தும், தனியாகவும் ஒவியக் கண்காட்சிகளும் நடத்தினார்.

நூல்கள்

தொகு
  • முன்னாள் பிரதமர் இந்திராவுடன் மேற்கொண்ட நேர்காணல்களை சோக்கர் அலேய் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.
  • சீன சுற்றுப் பயணத்தை சேனா அசெனாய் சின் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.[3]

இறப்பு

தொகு

சுவாசக் கோளாறு காரணமாக அகத்து 18, 2015 ஆம் ஆண்டு காலை 10.51 மணிக்கு டெல்லியில் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவ்ரா_முகர்ஜி&oldid=3894389" இலிருந்து மீள்விக்கப்பட்டது