கதக்

இந்திய பாரம்பரிய நடனம்

கதக் (Kathak) என்பது இந்திய பாரம்பரிய நடனத்தின் ஒன்பது முக்கிய வடிவங்களில் ஒன்றாகும்.[1] இந்த நடன வடிவத்திற்கான மூலங்கள், கதாகர் என்கிற கதைச்சொல்லிகள் பழங்காலத்து வட இந்தியாவின் நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கிராம மையப்பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் நிகழ்வுகளை நடத்திய இந்த பாணர்கள், பெரும்பாலும் புராணக் கதைகள் மற்றும் வேதப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிக் கதைகளை விவரித்துக் கூறுவதில் நிபுணர்களாக இருந்தனர். மேலும் தங்கள் கதை எடுத்துரைத்தலை கை அசைவுகள் மற்றும் முகபாவங்களால் அலங்கரித்தனர். கதைகளுக்கு உயிரூட்டுவதற்கு, இசைக் கருவிகள் மற்றும் வாய்மொழி இசைகளுடன் புது நடையிலான கை அசைவுகளைப் பயன்படுத்தும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அரங்கமாக இருந்தது

கதக்
சின்ஜினி குல்கர்னி கதக் நடன நிகழ்ச்சியை வழங்குகிறார்
வகைஇந்தியப் பாரம்பரிய நடனங்கள்
கருவி(கள்)சலங்கை, கைம்முரசு இணை, தாளம் (இசைக்கருவி)
தோற்றம்உத்தரப் பிரதேசம்

கதக்கின் முன்மாதிரிக் கூறுகளை நீண்ட காலத்திற்கு முன்பே காணலாம் என்றாலும், பக்தி இயக்கத்தின் போதுதான் கதக் பரவலானது. குறிப்பாக இந்துக் கடவுளான கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் மற்றும் அவரது கதைகளை இணைப்பதன் மூலமும், வட இந்திய இராச்சியங்களின் அவையில் சுயாதீனமாகவும் இருந்தது.[2] முகலாய ஆட்சியின் போது, பேரரசர்கள் கதக் நடனத்தின் புரவலர்களாக இருந்தனர். மேலும் தங்கள் அரசவைகளில் அதை தீவிரமாக ஊக்குவித்தனர்.[3] கதக் நிகழ்ச்சிகளில் உருது கசல் மற்றும் முகலாய காலத்தில் கொண்டு வரப்பட்ட பொதுவாக பயன்படுத்தப்படும் கருவிகள் இடம் பெறுகின்றன.[4] இதன் விளைவாக, பாரசீக கூறுகளைக் கொண்ட ஒரே இந்திய பாரம்பரிய நடன வடிவமாகவும் இதைக் கருதலாம்.[5]

பண்டைய இந்தியாவில் கதக் நடனக் கலைஞர்கள், பயணக் குழுக்களாக இருந்தனர், அவர்கள் கதகாக்கள், அல்லது கதாகர் (பாணர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.[6][7]

குய்மெட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சர்மிளா சர்மா மற்றும் ராஜேந்திர குமார் கங்கானி ஆகியோரின் செயல்திறன் (நவம்பர் 2007)

மேரி ஸ்னோட்கிராஸ் என்ற அமெரிக்க எழுத்தாளரின் கூற்றுப்படி, இந்தியாவின் கதக் பாரம்பரியம் கிமு 400 வரை செல்கிது. பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் எனும் காந்தர்வ வேதம் கதக்கின் வேக்ளைக் கொண்டுள்ளது.

காந்தர்வ சாத்திரம் 6,000 சுலோகங்களும், 36 அதிகாரங்களும் கொண்டது. அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்று இருந்தன. இன்றுள்ள கந்தர்வ வேதத்தில் சங்கீதம், நடனம், நாட்டியம், நாடகம், கவிதை அடங்கும்.[8][9]

பக்தி இயக்க சகாப்தம்

தொகு

ஒரு பாரம்பரிய நடன வடிவமாக "கதக்" வாரணாசியில் தொடங்கி அங்கிருந்து வடமேற்கில் இலக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததாக உரை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[10] இராதா-கிருஷணரின் மீதான எழுச்சிமிகு ஆராதனை நடைபெற்று வந்த காலத்தில், இந்த உருவங்களின் வாழ்க்கையிலிருந்து கதைகளைச் சொல்வதற்கு கதக் பயன்படுத்தப்பட்டது. கதக் நடனத்தின் லக்னோ பாரம்பரியம், உத்தரபிரதேசத்தின் அலகாபாத் உள்ள ஹாண்டியா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர் உருவக்கியதாக கூறப்படுகிறாது. அவர் தனது கனவில் இந்து கடவுளான கிருஷ்ணர் தோன்றியதாகவும், "நடனத்தை ஒரு வழிபாட்டு வடிவமாக" வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.[11]

முகலாய சகாப்தம்

தொகு

முகலாயர்களின் வருகையின்போது, இந்த நடன வடிவம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றது. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அந்த நடனம் முகலாயர் அரசவையை அடைந்தபின்னர் தான் கதக் தன்னுடைய தனித்தன்மையுடைய வடிவம் மற்றும் அம்சங்களைப் பெறத் தொடங்கியது. இங்கு அது இதர பல்வேறு வடிவங்களால் நடனம் மற்றும் இசையை எதிர்கொண்டது மிகக் குறிப்பாக பெர்சியாவிலிருந்து வந்த நடனங்கள். தங்கம், நகை முதலான பரிசுகள் மற்றும் அரசவை சலுகைகளை வழங்கி நடனக் கலைஞர்கள் கோவில்களிலிருந்து அரசவைக்கு இழுக்கப்பட்டனர். சமூக அந்தஸ்துடைய நடனக் கலைஞர்களும் அரசவையில் வெளிப்பட ஆரம்பித்தவுடன் அதற்கான ஆதரவும் பெருகியது. இங்கு அடிக்கடி நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. வட இந்திய முகலாய அரசவைகளின் சூழல், சுத்தமான ஆன்மீக கலை வடிவமாக இருந்த கதக்கை அரசவை மகிழ்வூட்டும் நிகழ்வாக கவனம் செலுத்தும் நிலைக்கு மாற்றியது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட நடனக் கலைஞர்கள் தங்கள் எண்ணங்களை கதக் நடனக்கலைஞர்களிடம் பரப்பினர். அதே நேரத்தில தங்களுடைய நடனங்களில் சேர்த்துக்கொள்வதற்காக கதக்கிலிருந்த உத்திகளைப் பெற்றார்கள். கதக் இந்தப் புதிய உள்ளீடுகளை உள்வாங்கிக்கொண்டு, அதனுடைய சொந்த சொற்களஞ்சியத்தின் ஒரு உள் அங்கமாக ஆகும் வரையில் அதைத் தழுவிக்கொண்டது.

முகலாய சகாப்த அரசவைகளும் பிரபுக்களும் கதக்கை தங்களுடைய பொழுதுபோக்கின் ஒரு வடிவமாக ஏற்றுக்கொண்டனர்.[12]

ஆங்கிலேயர் காலத்தில்

தொகு

19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து கதக்கில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. விக்டோரிய நிர்வாகத்தினர் அதை ஒரு கீழ்த்தரமான அழகற்ற வடிவிலான கலைநிகழ்ச்சியாக வெளிப்படையாக அறிவித்தனர்.[13] இத்தகைய கலாச்சார சீர்கேடுகளின்போதும், இந்த கலை வடிவங்களை நடனக் கலைஞர்கள் பாதுகாத்தனர். அப்போதைய அரசியல் கொள்கைகளால் அதிகாரப்பூர்வமாக இழிவுபடுத்தப்பட்டபோதிலும், கதக்கை பராமரிக்கவும் அது தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் கௌஹர் ஜான் போன்ற பிரபல கலைஞர்கள் முக்கியப் பங்காற்றினர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்

தொகு

காலனித்துவ சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சுதந்திர இந்தியாவுக்கான இயக்கமும் கதக்கின் மறுமலர்ச்சியைக் கொண்டு சென்றது. மேலும் பரவலாக, கலாச்சார புத்துணர்ச்சியையும், கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கும் வரலாற்றை மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் முயற்சி செய்தது.[14]

கதக் நடனமாடும் நடனக் கலைஞர் மணிஷா குல்யாணி

ஆடைகள்.

தொகு

வெவ்வேறு சமுதாயச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த நடன பாணியே மாறிய நிலையில், நடனக் கலைஞர்களின் உடைகளும் நிகழ்த்துவதற்கான உடைகளும் மாறியிருக்கின்றன.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "'Kathak — India's only secular classical dance form'". Dawn. பார்க்கப்பட்ட நாள் 2018-12-29.
  2. John H. Beck (2013). Encyclopedia of Percussion. Routledge. pp. 170–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-74768-0.
  3. "BBC Arts - BBC Arts - Kathak: Does every gesture have a meaning?". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  4. "Kathak, The Indo-Persian Dance Style |". Asian Traditional Theatre & Dance (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-10-02. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  5. "Kathak Dance Puts Hinduism and Islam in the Same Circle".
  6. Margaret E. Walker (2016). India's Kathak Dance in Historical Perspective. Routledge. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-11737-7.
  7. Bruno Nettl; Ruth M. Stone, James Porter and Timothy Rice (1998). The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Routledge. pp. 493–494. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1.
  8. Katherine Young; Arvind Sharma (2004). Her Voice, Her Faith: Women Speak on World Religions. Westview Press. pp. 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-4666-3.
  9. Guy L. Beck (2012). Sonic Liturgy: Ritual and Music in Hindu Tradition. University of South Carolina Press. pp. 138–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61117-108-2. Quote: "A summation of the signal importance of the Natyasastra for Hindu religion and culture has been provided by Susan Schwartz, "In short, the Natyasastra is an exhaustive encyclopedic dissertation of the arts, with an emphasis on performing arts as its central feature. It is also full of invocations to deities, acknowledging the divine origins of the arts and the central role of performance arts in achieving divine goals (...)".
  10. Margaret E. Walker (2016). India's Kathak Dance in Historical Perspective. Routledge. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-11737-7.
  11. Margaret E. Walker (2016). India's Kathak Dance in Historical Perspective. Routledge. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-11737-7.
  12. Mary Ellen Snodgrass (2016). The Encyclopedia of World Folk Dance. Rowman & Littlefield. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-5749-8.
  13. Leslie C. Orr (2000). Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu. Oxford University Press. pp. 11–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-535672-4.
  14. Margaret E. Walker (2016). India's Kathak Dance in Historical Perspective. Routledge. pp. 99–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-11737-7.
  15. Massey 1999, ப. 30-31.

துணை நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கதக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதக்&oldid=4097924" இலிருந்து மீள்விக்கப்பட்டது