நாடகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.
விளக்கமும் செயல்பாடுகளும்
தொகு- 'இயல்' என்பது சொல் வடிவம்,
- 'இசை' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
- 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை, தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.
அருஞ்சொற் பொருள்
தொகு- கதைக்கோப்பு - Plot
- கதாப் பாத்திரம் - Character
- உரையாடல் - Dialogue
- பின்னணி - Setting
- வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
- உத்திகள் - Techniques
- மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting
இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் |