ரோமானிய நாடக வரலாறு
ரோம் நகரில் கி.பி. 240 ஆம் ஆண்டு முதல் சீரான நாடகங்கள் நடைபெற்றன. நாடகப் பின்னணிக் காட்சியமைப்பு எதுவுமின்றி தளத்தின் பின்னணியிலிருந்து சுவற்றில், சிலைகள் போன்று வரையப்பெற்று நாடகங்கள் நடிக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு காலத்து நடிப்புக்கலை வடிவங்களினைப் பற்றிய குறிப்புகள் இல்லாததும் குறிப்பிடத்தக்கது. ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளிற்கு மேலாக ரோமானிய நாடகங்கள் மறைந்திருந்தன. இக்காலத்தின் பின்னர் நானூறு ஆண்டுகள் கழித்து கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் காலத்தில் கிறித்துவ சபைகள் ரோமானிய நாடக அரங்குகளினைப் பயன்படுத்தியதனால் அரங்கச் செயற்பாடுகள் வளர்ந்தன. ரோமானிய நாடகங்கள் புத்துயிர் பெற்றன.
உசாத்துணை
தொகு- ஜீவன், தமிழ் மரபு வழி நாடக மேடை (ப- 13,14,15) - நவம்பர்,2000.