சோ. ம. கிருசுணா
சோமனஅல்லி மல்லையா கிருசுணா (Somanahalli Mallaiah Krishna) முன்னாள் கருநாடக முதலமைச்சராவார். இவர் இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவிவகித்தவர். 2004-2008 ஆண்டுகளில் மகாராட்டிரா மாநில ஆளுநராக பதவிவகித்துள்ளார். தற்போது பாஜகவில் உள்ளர்.
சோ. ம. கிருசுணா | |
---|---|
கிருஷ்ணா, சூன் 3, 2010 அன்று வாஷிங்டன், டி.சி.யில் | |
27th வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா) | |
பதவியில் 23 மே 2009 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பிரணப் முகர்ஜி |
பின்னவர் | சல்மான் குர்சித் |
18வது மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 12 திசம்பர் 2004 – 5 மார்ச் 2008 | |
முதலமைச்சர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
முன்னையவர் | முகமது பாசல் |
பின்னவர் | எஸ். சி. ஜமீர் |
10வது கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 11 அக்டோபர் 1999 – 28 மே 2004 | |
முன்னையவர் | ஜே. ஹெச். படேல் |
பின்னவர் | தரம்சிங் |
1வது துணை முதலமைச்சர் | |
பதவியில் 21 சனவரி 1993 – 11 திசம்பர் 1994 | |
முதலமைச்சர் | வீரப்ப மொய்லி |
முன்னையவர் | புதிதாக உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஜே. ஹெச். படேல் |
தொகுதி | மத்தூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மே 1932 மண்டியா மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (கருநாடகம், இந்தியா) |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (மார்ச் 2017 — சனவரி 2023)
|
துணைவர் | பிரேமா |
உறவினர் | வி. ஜி. சித்தார்த்தா (மருமகன்) |
முன்னாள் கல்லூரி | பல்கலைக்கழக சட்டக் கல்லூரி, பெங்களூர் டெட்மேன் சட்டப் பள்ளி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளி |
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
தொகுகிருஷ்ணா எஸ். சி. மல்லையாவின் மகன் ஆவார். இவர் கருநாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் தாலுகாவில் உள்ள சோமனஅள்ளி என்ற கிராமத்தில் வொக்கலிகா குடும்பத்தில் பிறந்தார். மைசூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலாவில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை முடித்தார். மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த பின்னர், கிருஷ்ணா, பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி என்று அழைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். கிருஷ்ணா அமெரிக்காவில் டல்லாஸ், டெக்சாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார். இங்கு இவர் முழு நிதியுதவியுடன் கல்வி பயின்ற அறிஞராக இருந்தார். இவர் இந்தியா திரும்பிய உடனேயே, 1962-ல் கர்நாடக சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வகித்தப் பதவிகள்
தொகு- 3வது கருநாடக சட்டமன்ற உறுப்பினர், 1962-67, மத்தூரிலிருந்து. ஆனால் 1967-ல் தோல்வியடைந்தார்.
- பொதுநலவாய நாட்டுக்கான இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர், பாராளுமன்ற மாநாடு, நியூசிலாந்து, 1965
- 4வது மக்களவை உறுப்பினர், 1968-1971, இடைத்தேர்தலுக்குப் பிறகு மாண்டியாவிலிருந்து சோசலிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்
- உறுப்பினர், 5வது மக்களவை 1971-1972, மாண்டியாவிலிருந்து காங்கிரசு வேட்பாளர்
- உறுப்பினர், கர்நாடக சட்ட மேலவை 1972–1977
- 1972-77 கர்நாடக அரசு வணிகம் & தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
- உறுப்பினர், 7வது மக்களவை 1980-1984, மாண்டியாவிலிருந்து. ஆனால் 1984 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்
- உறுப்பினர், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதிகள், 1982
- 1983-1984 காலகட்டத்தில் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தார்
- 1984-1985 காலகட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்
- உறுப்பினர், 9வது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் 1989–1994
- சபாநாயகர், கர்நாடக சட்டமன்றம் 1989–93
- மார்ச் 1990 இல் ஐக்கிய இராச்சியம், வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெற்ற பொதுநலவாய நாடாளுமன்றக் கருத்தரங்கிற்குப் பிரதிநிதி
- கர்நாடகாவின் துணை முதல்வர், 1993-1994
- ஏப்ரல் 1996-ல் மாநிலங்களவை உறுப்பினர்
- கர்நாடக முதல்வர் அக்டோபர் 1999 - 2004 (மத்தூர் சட்டமன்ற உறுப்பினர்)[2]
- கர்நாடக சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்: 2004 (சாம்ராஜ்பேட்டை தொகுதி)
- ஆளுநர், மகாராட்டிரா: 2004–2008
- 2008-2014 கருநாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்[3]
- வெளிவிவகார அமைச்சர், இந்திய அரசாங்கம்: 22 மே 2009 முதல் 26 அக்டோபர் 2012 வரை[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "S.M. Krishna: US-educated, experienced politician". thaindian.com. 22 May 2009. Archived from the original on 7 April 2012. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
- ↑ "Maddur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency".
- ↑ "member profile".
- ↑ "Detail profile – Archive Site of National Portal of India". Govt. of India. Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-10.