முதன்மை பட்டியைத் திறக்கவும்

எஸ். சி. ஜமீர்

சனயங்க்பா சுபதோஷி ஜமீர் (பிறப்பு: அக்டோபர் 17, 1931[1]) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜூலை 2008 இல் இருந்து மகாராட்டிரா மாநில ஆளுனராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கோவா மாநில ஆளுனராகவும் நாகாலாந்து மாநில முதலமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.

எஸ். சி. ஜமீர்
SC Jamir sitting at Raj Bhavan.jpg
பிறப்பு17 அக்டோபர் 1931 (age 88)
Ungma
படித்த இடங்கள்
  • Scottish Church College

ஜாமீர் நாகாலாந்து மாநிலத்தவர். நாகாலாந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக அமைக்கப்பட 1960 இல் அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற குழுவில் அங்கம் வகித்தவர்[1]. பின்னர் அவர் நாகாலாந்தில் நான்கு முறை 1980, 1982-1986, 1989-90 மற்றும் 1993-2003 ஆகிய காலப்பகுதிகளில் முதலமைச்சராக இருந்திருக்கிறார். தனது முதல் இரு பதவிக்காலங்களில் "முன்னேற்ற ஐக்கிய சனநாயக முன்னணி" என்ற கட்சியின் சார்பில் பணியாற்றினார். 1989 இல் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஜூலை 2004 முதல் ஜூலை 2008 வரை கோவா ஆளுனராக பணியாற்றினார்.

மகாராட்டிர ஆளுனர் எஸ். எம். கிருஷ்ணா பதவி விலகியதை அடுத்து, மார்ச் 6, 2008 இல் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் ஜமீருக்கு மகாராட்டிரத்தை கூடுதல் பொறுப்பாக அளித்தார்[2]. 2008 ஜூலையில் மகாராட்டிர ஆளுனராக முறையாக அரசாணையிடப்பட்டு[3] 2008, ஜூலை பத்தொன்பதாம் நாளில் பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "S.C. Jamir sworn in Maharashtra Governor", PTI (The Hindu), July 19, 2008.
  2. "Krishna resignation accepted, Jamir in charge of State", Sify.com, March 5, 2008
  3. "Three more governors shuffled", IST, TNN (The Times of India), July 9, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சி._ஜமீர்&oldid=2733800" இருந்து மீள்விக்கப்பட்டது