ஜூலை 2008
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜூலை 2008, 2008 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் ஜூலை 16 புதன்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 16 சனிக்கிழமையில் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
தொகு- ஜூலை 4 - விவேகானந்தர் நினைவு நாள்
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- ஜூலை 29: ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து 30 மைல் கிழக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நிகழ்ந்தது. (ஏபிசி)
- ஜூலை 28: ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தமிழரான நவநீதம் பிள்ளை ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 27: இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 16 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 26: 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 25:
- 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்: பெங்களூரில் இடம்பெற்ற ஏழு குண்டுவெடிப்புகளில் 2 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- லண்டனில் இருந்து 365 பயணிகளுடன் மெல்பேர்ண் சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட துளை ஒன்றை அடுத்து அது மணிலாவில் அவசரமாகத் தரையிறங்கியது. (ஏஎஃப்பி)
- ஜூலை 22: இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மான இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு 19 வாக்குகளால் வெற்றி பெற்றது. (த டைம்ஸ்)
- ஜூலை 21:
- 12 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்த யூகொஸ்லாவியாவின் முன்னாள் அரசுத் தலைவர் ரடோவான் கராட்சிச் சேர்பியாவில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
- நேபாளத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராம் பரன் யாதவ் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். (சீனா டெய்லி)
- அமெரிக்க வான்படையின் பி-52 குண்டுவீச்சு விமானம் குவாமுக்கு அருகில் மேற்கு பசிபிக் கடலில் வீழ்ந்தது. (ஏபி)
- ஜூலை 19:
- கம்போடியாவின் இந்துக் கோயில் பிரசாத் பிரா விகார் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடக்க ஆயிரக்கணக்கான தாய் மற்றும் கம்போடியப் படையினர் தத்தமது எல்லைகளில் குவிக்கப்பட்டனர். (பிரான்ஸ் 24)
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 10 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- சிட்னியில் இடம்பெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வில் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த மதகுருக்களினால் கடந்த காலங்களில் பாலியல் துன்புறுத்தலுக்காளான சிறுவர்களுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார். (பிபிசி)
- ஜூலை 16:
- மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பில் கைது செய்யப்பட்டார். (ஏபி)
- ஜூலை 15:
- பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் கலந்து கொள்ளும் உலக இளையோர் நாள் 2008 நிகழ்வுகள் சிட்னியில் ஆரம்பமாயின. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- கிரேக்கத்தில் ரோட்ஸ் தீவில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். (ஏபி)
- ஜூலை 14:
- தார்ஃபூர் போர் - டார்பூரில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் அம்மன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.(பிபிசி)
- மாக்கிமாக்கி ஒரு புதிய குறுங்கோளாக (dwarf planet) அறிவிக்கப்பட்டது. (யுனிவேர்ஸ் டுடே)
- ஜூலை 13: உலக இளையோர் நாள் 2008 நிகழ்வுகளில் கலந்து கொள்ளவென பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் சிட்னி வந்துசேர்ந்தார். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஜூலை 12: அலாஸ்காவின் உம்னாக் தீவில் உள்ள ஒக்மொக் மலை வெடித்ததில் தீவின் கிழக்குப் பகுதி மக்கள் வெளியேறினர். (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 11: ஐநா பாதுகாப்பு அவையில் சிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தடுத்து நிறுத்தின. (பிபிசி)
- ஜூலை 9:
- அணுக்கரு ஆற்றல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உடன்படிக்கை வரைவு வெளியிடப்பட்டது. (வாஷிங்டன்போஸ்ட்)
- நீண்ட நடுத்தர இலக்குகளை தாக்கியழிக்கும் வீச்சை கொண்ட சஹாப் 3 உட்பட ஒன்பது ஏவுகணை சோதனைகளை ஈரான் மேற்கொண்டது. (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 8:
- 2050 ஆம் ஆண்டளவில், புவியை வெப்பமடையச் செய்யும் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்று டோக்கியோவில் கூடியுள்ள ஜி8 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். (பிபிசி)
- செக் குடியரசில் ஐக்கிய அமெரிக்காவின் ஏவுகணை தற்காப்புக் களம் ஒன்றை நிறுவுவதற்கு இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தன. (ஏபி)
- ஜூலை 7:
- பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் 11ம் நூற்றாண்டு இந்துக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. (தி ஐலண்ட்)
- 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியத் தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர். (ஹிண்டு)
- ஜூலை 6:
- இந்தியத் துடுப்பாட்ட அணியை 100 ஓட்டங்களால் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. (தினக்குரல்)
- விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபயெல் நடால் சுவிட்சர்லாந்தின் ரொஜர் ஃபெடரரை 6-4, 6-4, 6-7 (5), 6-7 (8), 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதற்தடவையாக விம்பிள்டன் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றார். (பிபிசி)
- டோக்கியோவில் இடம்பெறவிருக்கும் ஜி8 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவென உலகத் தலைவர்கள் ஜப்பான் வந்தடைந்தனர். (ரொய்ட்டர்ஸ்)
- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செம்மசூதிக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். (கார்டியன்)
- ஜூலை 5: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அவரது சகோதரி செரீனா வில்லியம்சை 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஐந்தாவது தடவையாக விம்பிள்டன் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார். (பிபிசி)
- ஜூலை 2:
- 31 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 விண்கலம் சூரியனின் அதிர்ச்சி அலைகள் குறித்து தகவல்களை அனுப்பியது. (டெய்லி டெலிகிராப்)
- கொலம்பியாவில் கொலம்பிய புரட்சி இராணுவப் படையினரால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட அரசியல்வாதி இங்கிறிட் பெட்டன்கோர்ட், மூன்று அமெரிக்கர்கள் உட்பட 14 பேர் கொலம்பிய அரசு அதிரடித் தாக்குதல் நடத்தி விடுவித்தது. (பிபிசி)
- ஜூலை 1: மங்கோலியாவில் தேர்தல்களை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து அங்கு அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. (பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஜூலை 25: முல்லைத்தீவு, துணிக்காயில் இலங்கைப் படையினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் 25 படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜூலை 23: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தேவன்பிட்டித் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடு அன்னையின் சொரூபம் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. (தினக்குரல்)
- ஜூலை 22: இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தனர். இந்த ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. (புதினம்)(புதினம்)
- ஜூலை 17: பிரித்தானியாவில் அகதி நிலை மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்ட்டால் அவர்கள் அங்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாவர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் எவரையும் திருப்பி அனுப்பக்கூடாது என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்தது. (டெய்லி மிரர்)
- ஜூலை 16:
- மட்டக்களப்பில் பாலமீன்மடுப் பகுதியில் 16 பேரின் எலும்புத் துண்டங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (புதினம்)
- மன்னாரில் அமைந்துள்ள விடத்தல் தீவு என்ற கடற்புலிகளின் மிக முக்கியமான தளம் ஒன்றைத் தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (பிபிசி)
- ஜூலை 15:
- வவுனியாவின் பாலமோட்டையில் இடம்பெற்ற தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- அம்பாறையில் மொனறாகல சாலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்னர். (புதினம்)
- ஜூலை 14: யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொறிவெடியில் சிக்கி நான்கு படையினர் கொல்லப்பட்டனர். (தினக்குரல்)
- ஜூலை 12: பொங்கு தமிழ், 2008: ஐக்கிய இராச்சியம், லண்டனில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றனர். (புதினம்)
- ஜூலை 11:
- மொனறாகலயில் பயணிகள் பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு, 16 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகளின் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கி 26 இலங்கை படையினர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூலை 9: வவுனியா, பாலமோட்டையில் இலங்கை படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் 5 படையினர் கொல்லப்பட்டு 7 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- ஜூலை 8: விடுதலைப் புலிகளுடன் ஜூன் மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் 112 படையினர் கொல்லப்பட்டு, 793 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்தார். (புதினம்)
- ஜூலை 6:
- மொனராகலையில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (புதினம்)
- கிளிநொச்சி வட்டக்கச்சியில் வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்தன(புதினம்). வன்னியில் வான்தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய இந்த வானூர்தி கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் ஓடுபாதையில் இருந்து விலகியதால் சேதமடைந்தது. (டெய்லிமிரர்)
- பொங்கு தமிழ், 2008: ஆஸ்திரேலியா, சிட்னி மாநகரில் பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பெருந்தொகையான மக்கள் பங்கு கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். (புதினம்)
- ஜூலை 5: பொங்கு தமிழ், 2008:
- சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் பேரெழுச்சியுடன் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். (புதினம்)
- கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்குபற்றினர். (புதினம்)
- ஆஸ்திரேலியா, மெல்பேர்ணில் நிகழ்ந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் 2,000 இற்கும் அதிகமானோர் பங்கு பற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறப்புரை ஆற்றினார். (புதினம்)
- ஜூலை 4: அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி 2 இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர்.(புதினம்)
- ஜூலை 3: மன்னாரில் இலங்கைப் படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டு 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- ஜூலை 2: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். (பிபிசி)
- ஜூலை 1:
- அம்பாறையில் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் உலங்குவானூர்தி கடுமையாகச் சேதமடைந்தது. (புதினம்)
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்