ஆகஸ்ட் 2009
<< | ஆகத்து 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXIV |
'ஆகஸ்ட் 2009 ஒரு சனிக்கிழமையில் ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை தொடங்கி செப்டம்பர் 16 புதன்கிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- ஆகஸ்ட் 30:
- ஜப்பானில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் யுகியோ அட்டொயாமா தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. (நியூயோர்க் டைம்ஸ்)
- தலாய் லாமா தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். (அல்ஜசீரா)
- ஆகஸ்ட் 29: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. (இண்டியன் எக்ஸ்பிரஸ்)
- ஆகஸ்ட் 28: நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 27:
- கொழும்பில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். (வீரகேசரி)
- வடகிழக்கு பர்மாவில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 26: இலங்கையில் 1989ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)]
- ஆகஸ்ட் 25:
- மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)
- தெற்கு ஆப்கானிஸ்தான், கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- செச்சினியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- வன்னி படையெடுப்பை நடத்திய இலங்கை படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். சனல் 4
- ஆகஸ்ட் 24: வியநாம் போரின் போது கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் புதைகுழிகள் இரண்டு மத்திய வவியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டன. (சைனா டெய்லி)
- ஆகஸ்ட் 21:
- வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- செச்னியாவில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 20: 1988 இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டார். (பிபிசி)
- ஆகஸ்ட் 17:
- ஆகஸ்ட் 16:
- சுமாத்திராவின் சிபெருட் தீவுக்கருகில் 6.9 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறந்தது 7 பேர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
- இரண்டு ரஷ்ய போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.(பிபிசி)
- ஆகஸ்ட் 15: கொலம்பியா தனது ஏழு இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. (பிபிசி)
- ஆகஸ்ட் 14:
- பாகிஸ்தான் தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் தொடருந்து சேவையை இஸ்லாமாபாத்திற்கும் இஸ்தான்புல்லிற்கும் இடையே ஆரம்பித்தது. (பிபிசி)
- இந்தியப் பெருங்கடலில் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 77 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் வந்த படகை அவுஸ்திரேலியா வழிமறித்து தடுத்து நிறுத்தியது. தினகரன்)
- பிலிப்பைன்சில் அரச படைகளுக்கும் முஸ்லிம் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். தினாகரன்)
- துர்கஸ் கைகோசு தீவுகளில் அரச ஊழல் காரணமாக ஐக்கிய இராச்சியம் தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 13:
- ரஷ்யாவின் தாகெஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- இட்லரால் கையெழுத்திடப்பட்ட மைன் கம்ப் நூலின் மூலப்பிரதி ஒன்று லண்டனில் £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. (பிபிசி)
- ஆகஸ்ட் 12:
- தனது விண்மீன்களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் வாஸ்ப்-17பி (WASP-17B) என்ற முதலாவது கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 11:
- அந்தமான் தீவுகளில் 7.6 அளவு நிலநடுக்கமும் டோக்கியோவில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. (பிபிசி)
- சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)
- விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு கோள்களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 10:
- கிழக்கு இமயமலையில் 244 தாவரங்கள், 16 நிலநீர் வாழிகள் உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சின்குவா)
- ஈராக்கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
- ஆகஸ்ட் 9: வவுனியா நகரசபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும், யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் வெற்றி பெற்றன. (பிபிசி)(ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 8:
- மவுரித்தேனியாவில் பிரெஞ்சு தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)
- ஈழப்போர் முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் இலங்கையில் இடம்பெற்றன. (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 7: ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- ஆகஸ்ட் 6:
- விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
- மும்பையில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)
- பாகிஸ்தானின் சிந்து நதியில் பேருந்து ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 5: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை வட கொரியா விடுவித்தது. (சிஎனென்)
- ஆகஸ்ட் 4: மெல்பேர்ணில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சோமாலிய தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். (தி ஏஜ்)
- ஆகஸ்ட் 3:
- மேற்கு மெக்சிக்கோவில் பல நிலநடுக்கங்கள் பதிவாயின. (பிபிசி)
- தெற்கு சூடானில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.(பிபிசி)
- ஆகஸ்ட் 2:
- கனடாவில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். (சிபிசி)
- கிழக்கு ஜெருசலேம் நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 பாலஸ்தீனக் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். (பிபிசி)
- இந்தோனேசியாவின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. (ஏஎஃப்பி)
- வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. (சிஎனென்)
- ஆகஸ்ட் 1:
- மலேசியா, கோலாலம்பூரில் விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (அல்ஜசீரா)
- பாகிஸ்தானின் பஞ்சாபில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மங்கோலியாவில் 1930களில் முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல பௌத்தச் சின்னங்கள் கோபி பாலைவனத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. (பிபிசி)
ஆகஸ்ட் 2009 விக்கி செய்திகள் |
- ஆகஸ்ட் 31, 2009:
- ஆகஸ்ட் 30, 2009:
- ஆகஸ்ட் 29, 2009:
- ஆகஸ்ட் 28, 2009:
- ஆகஸ்ட் 27, 2009:
- ஆகஸ்ட் 26, 2009:
- ஆகஸ்ட் 25 2009:
- ஆகஸ்ட் 24, 2009:
- ஆகஸ்ட் 23, 2009:
- ஆகஸ்ட் 22, 2009:
- ஆகஸ்ட் 21, 2009:
- ஆகஸ்ட் 20, 2009:
- ஆகஸ்ட் 19, 2009:
- ஆகஸ்ட் 18, 2009:
- ஆகஸ்ட் 17, 2009:
- ஆகஸ்ட் 16, 2009:
- ஆகஸ்ட் 15, 2009:
- ஆகஸ்ட் 14, 2009:
- ஆகஸ்ட் 13, 2009:
- ஆகஸ்ட் 12, 2009:
- ஆகஸ்ட் 11, 2009:
- ஆகஸ்ட் 9, 2009:
- ஆகஸ்ட் 8, 2009:
- ஆகஸ்ட் 7, 2009:
- ஆகஸ்ட் 6, 2009:
- ஆகஸ்ட் 5, 2009:
- ஆகஸ்ட் 4, 2009:
- தாய்லாந்தில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் விமானி உயிரிழப்பு
- மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை|மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை|மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை
- மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை
- இந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு
- ஆகஸ்ட் 3, 2009:
- ஆகஸ்ட் 2, 2009:
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்