ஏப்ரல் 2007
ஏப்ரல் | ||||||
தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 |
ஏப்ரல் 2007 2007 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 2 - சொலமன் தீவுகளில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைத் தாக்கங்களில் 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.(பிபிசி)
- ஏப்ரல் 3 - சார்க் நாடுகளின் 16வது வருடாந்த உச்சிமாநாடு புது டில்லியில் ஆரம்பமானது. (IHT) (VOA) (Hindu) பரணிடப்பட்டது 2007-05-09 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 7 - தமிழ்நாட்டில் செந்தூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். (AP via Houston Chronicle)[தொடர்பிழந்த இணைப்பு]
- ஏப்ரல் 10 - இலங்கையில் கொழும்புக்குத் தெற்கே 80கிமீ தூரத்தில் பேருந்து ஒன்று பாரவண்டி ஒன்றுடன் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஏப்ரல் 11 - வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கொலைக் குற்றம் சாட்டப்பட்டார். (பிபிசி)
- ஏப்ரல் 12 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.(பிபிசி)
- ஏப்ரல் 16 - தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே தொடருந்துத் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு வாகனத்தின் மீது தொடருந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
- ஏப்ரல் 16 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
- ஏப்ரல் 23 - முன்னாள் ரஷ்ய அதிபர் பொரிஸ் யெல்ட்சின் மாரடைப்பால் மாஸ்கோவில் காலமானார்.(வாஷிங்டன் போஸ்ட்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ஏப்ரல் 24 - பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.(பிபிசி)
- ஏப்ரல் 25 - பூமியைப் போன்ற தட்பவெப்பநிலை காணப்படும் கோள் ஒன்றை ஐரோப்பிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்துக்கு `சுப்பர் பூமி' என்றும் பெயரிட்டுள்ளனர். தினக்குரல் பரணிடப்பட்டது 2007-04-29 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 27 - ரஷ்யாவின் இராணுவ ஹெலிக்கப்டர் ஒன்று செச்னியாவில் சூட்டு வீழ்த்தப்பட்டதில் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.(ராய்ட்டர்ஸ்) பரணிடப்பட்டது 2007-04-29 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 27 - டில்லியில் பொது வைபவம் ஒன்றில் இந்திய நடிகை சில்பா செட்டியை முத்தமிட்டதை அடுத்து ஹொலிவூட் சினிமா நட்சத்திரமான ரிச்சர்ட் கியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. (பிபிசி)
- ஏப்ரல் 28 - இங்கிலாந்தின் கென்ட் பகுதியின் சில பகுதிகளில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுப் பல வீடுகள் சேதமடைந்தன.(பிபிசி)
- ஏப்ரல் 28 - 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியைத் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை மீண்டும் பெற்றுக்கொண்டது. (ஏபிசி)
- ஏப்ரல் 28 - பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டு உள்நாட்டு அமைச்சர் அஃப்தாப் ஷேர்ப்போ காயமடைந்துள்ளார். (பிபிசி)
- ஏப்ரல் 29 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை மற்றும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின. (ரொய்ட்டர்ஸ்)
- ஏப்ரல் 29 - யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் (வயது 25) உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (புதினம்) பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம்
- ஏப்ரல் 30 - இரணைமடுக்கு அண்மையில் குண்டுவீச்சில் ஈடுபட்ட இலங்கையின் கிபீர் போர் விமானமொன்று விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இராணுவத்தினர் இதனை மறுத்திருக்கின்றனர். (தமிழ்நெட்)]
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்