அக்டோபர் 2014
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | அக்டோபர் 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
அக்டோபர் 2014 (October 2014), 2014 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் வெள்ளிக்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஐப்பசி மாதம் அக்டோபர் 18, சனிக்கிழமை தொடங்கி, நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமையில் முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின்படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் துல்கஜ் மாதம் செப்டம்பர் 26 துவங்கி அக்டோபர் 25 இல் முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
தொகு- அக்டோபர் 2 - சரஸ்வதி பூசை
- அக்டோபர் 3 - விஜயதசமி
- அக்டோபர் 3 - ஏனாதி நாயனார் குருபூசை
- அக்டோபர் 12 - திருநாளைப் போவார் நாயனார் குருபூசை
- அக்டோபர் 22 - தீபாவளி
- அக்டோபர் 24 - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
- அக்டோபர் 24 - மெய்கண்டார் குருபூசை
- அக்டோபர் 26 - பூசலார் நாயனார் குருபூசை
- அக்டோபர் 26 - ஹிஜ்ரி ஆண்டுப்பிறப்பு
- அக்டோபர் 29 - கந்தசஷ்டி முடிவு, சூரன் போர்
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- அக்டோபர் 31:
- புர்க்கினா பாசோவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசி கொம்போரே பதவி விலகினார். இராணுவத்தலைவர் ஒனோரே டிராரே இடைக்காலப் பொறுப்பை ஏற்றார். (பிபிசி)
- நைஜீரியாவின் கோம்பே மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- வர்ஜின் கலாக்டிக் விண்ணோடம் 2 சோதனைப் பறப்பின் போது கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார். (பிபிசி)
- பிஜி மீதான பொருளாதாரத் தடையை ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நீக்கின. (கார்டியன்)
- 2ஜி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி, உள்ளிட்ட 10 பேர் மீது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்தது. (பிபிசி)
- அக்டோபர் 30:
- இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐந்து தமிழக மீனவர்கள், மற்றும் மூன்று இலங்கையர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- புர்க்கினா பாசோவில் அரசுத்தலைவர் பிளைசி கொம்போரே பதவிவிலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய வன்முறைகளில் நாடாளுமன்றம் எரியூட்டப்பட்டது. இராணுவம் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஊரடங்குச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். கொம்போரே செனிகல் நாட்டுக்குத் தப்பி ஓடினார். (யூரோநியூஸ்)
- ஐக்கிய அமெரிக்காவின் கேன்சசு மாநிலத்தில் பீச்கிராப்ட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். (விச்சிட்டா ஈகில்)
- சுவீடன் பாலத்தீன நாட்டை அதிகாரபூர்வமாக சுதந்திர நாடாக அங்கீகரித்தது. இசுரேல் சுவீடனுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்தது. (இன்டிபென்டென்ட்)
- அக்டோபர் 29:
- 2014 பதுளை மண்சரிவு: இலங்கையின் மலையகத்தில் பதுளையில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டனர். (ராய்ட்டர்சு)(பிபிசி)
- இலங்கையில் அம்பாறை, திருக்கோவிலில் வட்டமடு பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு கால்நடைப் பண்ணையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 28:
- அவாயில் கிலாயூயா எரிமலை வெடிப்பை அடுத்து பாகோ நகர மக்கள் அங்கிருந்து வெளியேறினர். (பிபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: லைபீரியா, கினி சியேரா லியோனி நாட்டு குடிமக்கள் ஆஸ்திரேலியாவுக்கு வர அந்நாடு தடை விதித்தது. (ராய்ட்டர்சு)
- சாம்பியா அரசுத்தலைவர் மைக்கேல் சாட்டா இலண்டனில் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் காலமானார்.(நியூவிசன்)
- பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற நாசாவின் ஆளில்லா அண்டாரெசு ஏவுகலன் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்ட சில செக்கன்களில் வெடித்துச் சிதறியது. (பால்ட்டிமோர் சன்)
- அக்டோபர் 26:
- ஆப்கானித்தான் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற மோதலில் 18 போராளிகள் கொல்லப்பட்டனர் என பாக்கித்தான் இராணுவம் அறிவித்தது. (ஏஎஃப்பி)
- ஆப்கானித்தானின் கடைசி பிரித்தானியப் படைத்தளம் மூடப்பட்டது. (பிபிசி)
- தென்னாப்பிரிக்கக் கால்பந்தாட்ட அணித் தலைவர் சென்சோ மெயிவா ஜோகானஸ்பேர்க் நகருக்கு அருகே சுடப்பட்டார். (ராய்ட்டர்சு)
- பிரேசிலில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட அரசுத்தலைவர் தேர்தலில் டில்மா ரூசெஃப் மீண்டும் வெற்றி பெற்றார். (ஏபி)
- அக்டோபர் 25:
- குர்தியப் போராளிகள் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த சூமார் நகரையும் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினர். (ராய்ட்டர்சு)
- எகிப்து சினாயில் மூன்று மாத அவசர நிலையைப் பிறப்பித்தது. (பிபிசி)
- ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு அலாஸ்கா, அரிசோனா, ஐடஹோ, வட கரொலைனா, மேற்கு வர்ஜீனியா, வயோமிங் மாநிலங்களில் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தது. (ஏபிசி)
- அக்டோபர் 24:
- {சினாய் தீபகற்பம்|சினாயில்]] போராளிகள் நடத்திய தாக்குதலில் 33 எகிப்தியப் படையினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சீன விண்வெளித் திட்டம்: நிலவைச் சுற்றி வந்து மி திரும்பக்கூடிய ஆளில்லா விண்கலம் ஒன்றை சீனா ஏவியது. (ஏபி)
- வான்குடையில் 135,000 அடிகள் வீழ்ந்து அலன் யூஸ்டேசு என்பவர் சாதனை படைத்தார். (டெய்லி மெயில்)
- அக்டோபர் 23:
- எருசலேமில் தொடருந்து நிலையம் ஒன்றில் ஹமாஸ் இயக்கப் போராளி பாதசாரிகள் மீது தனது வாகனத்தி மோதியதில் 3-மாதக் குழந்தை ஒன்று கொல்லப்பட்டது. (டைம்சு)
- நைஜீரியாவில் போகோ அராம் போராளிகள் பெண்கள் பலரைக் கடத்திச் சென்றனர். (பிபிசி)
- கினியில் எபோலா நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நியூயோர்க் நகர மருத்துவருக்கு எபோலா நோய் தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டது. (டபிள்யூஏபிசிடிவி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மாலியில் முதற்தடவையாக நோய் தொற்றியது. 2-வயது பெண் குழந்தைக்கு எபோலா தொற்றியது. (பிபிசி)
- அக்டோபர் 22:
- பால்டிக் கடல் பகுதியில் உருசியாவின் போர் விமானங்களை நேட்டோ வான்படை இடைமறித்தது. (ஏபி)
- கனடாவில் தேசிய போர் நினைவகத்திற்கு எதிரே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் போர் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். சுட்ட நபர் பின்னர் நாடாளுமன்றத்திற்குள்ளே சுட்டுக் கொல்லப்பட்டார். (சிபிசி)
- சிரியாவின் வடக்கே இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களின் இரண்டு விமானங்களைத் தாம் சுட்டு வீழ்த்தியதாக சிரியா கூறியுள்ளது. (ராய்ட்டர்சு)
- அக்டோபர் 21:
- காபூலில் வீதியோரக் குண்டு ஒன்று வெடித்ததில் 4 படையினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். (ஏபி)
- தனது காதலியைக் கொலை செய்தமைக்காக தென்னாப்பிரிக்க விளையாட்டு வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். (மெயில்), (என்பிசி)
- அக்டோபர் 20:
- லிபியாவில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஐந்து நாட்களில் 75 இசுலாமியப் போராளிகள் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் குர்தியப் படையினரை இணைக்க துருக்கி முன்வந்தது. (பிபிசி)
- டாக்காவில் இரு பேருந்துகள் மோதிக் கொண்டதில் 30 பேர் வரையில் உயிரிழந்தனர். (ஏஏபி)
- ஜோக்கோ விடோடோ இந்தோனேசியாவின் அரசுத்தலைவராக பதவியேற்றார். (பிபிசி)
- அக்டோபர் 19:
- 2014 ஆங்காங் எதிர்ப்புகள்: ஹொங்கொங் காவல் துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன. (வாசிங்டன் போஸ்ட்)
- அமெரிக்காவில் இயங்கும் மனித இரையகக் குடற்பாதை ஒன்று ஆய்வுகூடமொன்றில் உருவாக்கப்பட்டது. (ஏஏபி)
- ஓர்ட் எனப்படும் முகில் கூட்டம் செவ்வாய்க்கு மிக அருகாக 140,000 கிமீ தூரத்தில் வந்தது. (ஏபிசி)
- அக்டோபர் 18:
- காங்கோவின் பெனி நகரில் உகாண்டா கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- கென்யாவில் மிக அருகிய இன ஆண் வடக்கு வெள்ளை மூக்குக்கொம்பன் ஒன்று இறந்தது. (ஏபிசி), (சிட்னி மோர்னிங் எரால்டு)
- அக்டோபர் 17:
- சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. (பிபிசி)
- இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து இலங்கை தேர்தல் ஆணையர் நீக்கியுள்ளார். (பிபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: செனிகல் நாடு எபோலா பரவாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- அக்டோபர் 16:
- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. (டெய்லிமிரர்)
- வடமேற்குப் பாக்கித்தானில் இடம்பெற்ற வான்தாக்குதல்களில் குறைந்தது 27 போராளிகள் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- நியூசிலாந்து, மலேசியா, அங்கோலா, எசுப்பானியா, வெனிசுவேலா ஆகியன ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் 2015 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்புரிமை பெற்றன. (ராய்ட்டர்சு)
- அக்டோபர் 15:
- ஹுத் ஹுத் புயல் தாக்கத்தால் நேபாளம்|நேபாள]] இமயமலைப் பகுதிகளில் பனிப்புயல், மற்றும் பனிச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளனர். (எஸ்பிஎஸ்), (ராய்ட்டர்சு)
- ஐக்கிய அமெரிக்காவில் டாலசுவில் இரண்டாவது நிவாரணப் பணியாளர் எபோலா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார். (ராய்ட்டர்சு)
- 2014 ஆங்காங் எதிர்ப்புகள்: ஆங்காங்கின் மத்திய பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. (நியூயோர்க் டைம்சு)
- இலங்கையின் வடபகுதிக்குச் செல்கின்ற வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தது. (பிபிசி)
- பிரபலமான சவூதி சியா மனித உரிமைவாதி சேக் நிம்ர் அல்-நிம்ர் என்பவருக்கு சவூதி சிறப்பு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- ஆத்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு, அகதித் தஞ்சம் பெறுவதற்கு உரிமையில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- அக்டோபர் 14:
- துருக்கியின் போர்விமானங்கள் குர்திய பிகேகே போராளிகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தின. (பிபிசி)
- ஆத்திரேலிய எழுத்தாளர் ரிச்சர்டு ஃபிளானகன் 2014 ஆம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசு பெற்றார். (பிபிசி)
- ஹுத் ஹுத் புயல் தாக்கத்தால் இந்தியாவின் ஆந்திரா, மற்றும் ஒடிசாவில் 24 பேர் வரை உயிரிழந்தனர், 400,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- எசுப்பானியாவின் காத்தலோனியாவில் இடம்பெறவிருந்த தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு எசுப்பானிய அரசின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது. (புளூம்பர்க்)
- அக்டோபர் 13:
- இலங்கையில் 1990 முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவை, 24 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (தமிழ்மிரர்)
- பக்தாத் நகரத்தின் சியா பகுதிகளில் நடத்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்புகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- எல் சால்வடோரில் 7.4 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. (ராய்ட்டர்சு)
- பொலிவியாவில் ஏவோ மொராலெஸ் மூன்றாவது தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கார்டியன்)
- அக்டோபர் 12:
- ஈராக்கில் [இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு|இசுலாமிய தேச]]ப் படையினர் நடத்திய மூன்று தற்கொலைத் தாக்குதல்களில் 26 குர்தியர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- லிபியாவில் பல இனக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். (அல்-அராபியா)
- ஹுத் ஹுத் புயல் விசாகப்பட்டினம் நகரைத் தாக்கியது. ஆந்திராவில் மூவர் கொல்லப்பட்டனர். (ஏபி), (டைம்சு ஒஃப் இந்தியா)
- டெக்சஸ் தாதி ஒருவர் எபோலா நோயால் பீடிக்கப்பட்டார். (ஏபி)
- பொலிவியா தேர்தலில் அரசுத்தலைவர் ஏவோ மொராலெஸ் 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். (ஏபி)
- அக்டோபர் 11:
- போகோ அராம் தீவிரவாதக் குழுவினால் கடத்தப்பட்ட 27 பேர் விடுவிக்கப்பட்டனர் என கமரூன் அறிவித்தது. (ஏபி)
- வங்காள விரிகுடாவில் ஹுத் ஹுத் புயல் தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (எஸ்பிஎஸ்)
- அக்டோபர் 10:
- இசுலாமிய தேசப் படையினர் சிரிய எல்லையில் கோபேன் நகரில் குர்தியப் படையினரின் தலைமையகத்தைக் கைப்பற்றினர். (ஏஏபி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: ஆப்பிரிக்காவில் முதற்தடவையாக மாலியில் மூவருக்கு சோதனை முறையில் எபோலாவிற்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது. (ஆரெட்சு)
- எபோலா தாக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியது. (பிபிசி)
- 2014 அமைதிக்கான நோபல் பரிசு பாக்கித்தானின் மலாலா யூசப்சையி, இந்தியாவின் கைலாசு சத்தியார்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 9:
- யெமன் தலைநகர் சனாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். (டெய்லி ஸ்டார்)
- பாக்கித்தானின், வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 5 போராளிகள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 13 பேர் காயமடைந்தனர். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
- 2014 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு புதின எழுத்தாளர் பத்திரிக்கு மொதியானோவிற்கு அறிவிக்கப்பட்டது. (டெலிகிராப்)
- அக்டோபர் 8:
- மெக்சிக்கோவில் இகுவாலா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி ஒன்றில் இருந்த உடல்கள் அக்டோபர் 5 இல் காணாமல் போன 43 மாணவர்களில் 28 பேருடையதாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. (நியூயோர்க் டைம்சு)
- துருக்கியில் குர்தியப் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்தோனேசியாவில் சுலாவெசி தீல் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்கள் 40,000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (நியூயோர்க் டைம்சு)
- இந்தியாவில் கல்பாக்கம் அணுமின் நிலையப் பகுதியில் நடுவண் தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஐக்கிய அமெரிக்காவில் எபோலா தீநுண்ம நோய் தொற்றியதாக சந்தேகிக்கப்பட்ட லைபீரியர் டெக்சஸ் டாலஸ் நகரில் மரணமானார். (யூஎஸ்ஏ டுடே)
- எபோலா நோயின் தாக்கத்துடன் டெக்சாசில் மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். (சிபிஎஸ்), (ஏபிசி)
- வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கு தென் அமெரிக்கா, கிழக்காசியா மக்கள் இன்று அக்டோபர் 8 இல் முழுமையான நிலவு மறைப்பை கண்டனர். (பிபிசி)
- 2014 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு எரிக் பெட்சிக், இசுடீபன் எல், வில்லியம். ஈ. மோர்னர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (கார்டியன்)
- அக்டோபர் 7:
- வடக்கு ஈராக்கில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 29 இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- சீனாவின் யுன்னான் மாகானத்தில் ஏற்பட்ட 6.0 நிலநடுக்கத்தினால் குறைந்தது இருவர் கொல்லப்பட்டார். (ஸ்கை)
- 2014 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சப்பானியர்களான இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ, சுச்சி நாக்காமுரா ஆகியோருக்கு ஒளி உமிழ் இருமுனையம் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 6:
- இசுலாமிய தேசப் புரட்சியாளர்கள் லிபியாவிலும் காலூன்றினர். அவர்கள் லிபியாவின் டெர்னா நகரினுள் ஊடுருவினர். (அல் அராபியா)
- இந்தியா, பாக்கித்தான் எல்லைப் படையினர் சுட்டதில் இந்தியாவில் ஐந்து பொதுமக்களும், பாக்கித்தானில் நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வெளியே எபோலா நோய் தாக்கிய முதலாவது நபராக எசுப்பானியப் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். (நியூயோர்க் டைம்சு)
- 2014 ஆம் ஆன்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பிரித்தானியர் ஜான் ஓ'கீஃப், நோர்வேஜியர்கள் மே-பிரிட் மோசர், எட்வர்டு மோசர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (அஃப்டிங்டன் போஸ்ட்)
- அக்டோபர் 5:
- உருசியாவில் செச்சினியா மாநிலத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர், நால்வர் காயமடைந்தனர். (பிபிசி)
- பிரேசிலில் அரசுத்தலைவர் தேர்தல் இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. (பிபிசி)
- அக்டோபர் 4:
- இசுலாமிய தேச தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட பிரித்தானிய நிவாரணப் பணியாளர் ஆலன் ஹென்னிங் தலை துன்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டது. (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: கோபான் என்ற குர்திய நகரை இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். (கார்டியன்)
- பாலத்தீன் நாட்டை அங்கீகரிப்பதாக சுவீடனின் புதிய அரசு அறிவித்துள்ளது. (யூரோநியூஸ்)
- அக்டோபர் 3:
- சுவீடனில் இசுடீவன் இலோவென் தலைமையில் சிறுபான்மை அரசு அறிவிக்கப்பட்டது. (எஸ்விடி)
- அக்டோபர் 2:
- பல்கேரியாவில் வெடிமருந்துத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். (ஃபோக்கசு நியூஸ்)
- 40 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போர்க் காலத்தில் உயிர்கொல்லி ஆயுதங்களை இறக்குமதி செய்ய வியட்நாம் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கியது. (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- அக்டோபர் 1:
- காபூலில் தாலிபான் தற்கொலைப் படையினர் ஆப்கானிய இராணுவ வாகனத் தொடரைத் தாக்கியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர். (வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்)
- சிரிய உள்நாட்டுப் போர்: ஹோம்சு நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 41 சிறுவர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர், 56 பேர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)
- ஆர்க்டிக் கடலில் தங்குவதற்குக் கடற்பனி போதாமையால் வால்ரசு எனப்படும் கடற்பசுக்கள் பெரும்தொகையில் அலாஸ்காவின் வடமேற்குக் கடற்கரையில் கரையொதுங்கின. (கார்டியன்)
இறப்புகள்
தொகு- அக்டோபர் 2 - பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
- அக்டோபர் 14 - காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 20 - ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
- அக்டோபர் 21 - கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (பி. 1916)
- அக்டோபர் 24 - எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)
- அக்டோபர் 24 - தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்
- அக்டோபர் 28 - மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்