யாழ் தேவி
யாழ் தேவி (Yal Devi) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் தொடருந்து சேவையாகும்.
இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது இராகமை, பொல்காவலை, மாகோ சந்தி, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து செல்கின்றது. காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி, பிற்பகல் 1.15 இற்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி பிற்பகல் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது.
தற்போது இச்சேவை யாழ்ப்பாணம் வரை இடம்பெறுகின்றது. 1990 சூன் 12 ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.
2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கைப் படைத்துறை அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. வடக்கு தொடருந்துப் பாதையை கடனுதவியின் அடிப்படையில் அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியாவின் ரயில்வே அமைச்சின் கீழுள்ள இர்க்கொன் நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்தது.
இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி 2011 மே 27 அன்று ஓமந்தையை சென்றடைந்தது.
பின்னர் கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[3] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[4] 2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றது.[5]
2014ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாளன்று இதன் சேவை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பளை முதல் யாழ்ப்பாணம் வரை தொடங்கி வைக்கப்பட்டது.[6] யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 18 கிமீ தூரப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Island". Rampala regime in the local Railway History. 2010-07-19 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303194137/http://www.island.lk/2008/07/23/features5.html.
- ↑ ""Sri Lanka Railways Timetable"". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
- ↑ 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 14, 2013
- ↑ "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும்: குமார் வெல்கம". தமிழ்மிரர். 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "யாழ்ப்பாணம்–கொழும்பு இடையே நிறுத்தப்பட்டு இருந்த 'யாழ் தேவி' ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் அதிபர் ராஜபக்சே தொடங்கி வைத்தார்". பிபிசி தமிழ். 14 அக்டோபர் 2014. Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.