வவுனியா தொடருந்து நிலையம்
வவுனியா தொடருந்து நிலையம் அல்லது வவுனியா புகையிரத நிலையம் (Vavuniya railway station) இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் 1990 யூலை முதல் வவுனியாவில் இருந்து வடக்கே சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.[1] 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்குப் பாதை படிப்படியாக புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது (மார்ச் 2014) வவுனியாவூடாக கிளிநொச்சி மாவட்டம், பளை வரை சேவைகள் நடைபெறுகின்றன.[2]
வவுனியா தொடருந்து நிலையம் Vavuniya Railway Station වවුනියා | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | வவுனியா இலங்கை | ||||||||||
ஆள்கூறுகள் | 8°45′15.40″N 80°29′37.60″E / 8.7542778°N 80.4937778°E | ||||||||||
உரிமம் | இலங்கையில் தொடருந்து போக்குவரத்து வரலாறு | ||||||||||
தடங்கள் | வடக்குப் பாதை | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலை | இயங்குகிறது | ||||||||||
வரலாறு | |||||||||||
மின்சாரமயம் | No | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Edirisinghe, Dasun (10 மார்ச் 2009). "Rebuilding of KKS – Vavuniya rail track: JVP unions offer free labour with demands; We can do it without them – Dallas". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140309201526/http://www.island.lk/2009/03/10/news13.html.
- ↑ "Yal Devi off to Palai". டெய்லி மிரர். 4 மார்ச் 2014. http://www.dailymirror.lk/news/43976-yal-devi-off-to-palai.html.